Skip to content

சொல் பொருள் விளக்கம்

எழுவுஞ்சீப்பு

சொல் பொருள் விளக்கம் கதவுக்கு வலியாக உள்வாயிற்படியிலே வீழாது எடுக்கவிடும் மரங்கள் ‘கதவோடு பொருந்தின மேலில் தாழுமாம்; நிரைத்த கதவுமாம்; திறக்குங்காலத்து மேலே எழுப்புகையால் எழுவுஞ்சீப்பு என்றார். (சிலப். 15-215. அரும்பத.)

எருது

சொல் பொருள் ஏர்த் தொழிலாகிய உழவுக்குப் பயன்படும் காளைமாடு சொல் பொருள் விளக்கம் எருது என்ற தமிழ்ப் பதம் பழங் கன்னடத்தில் ஏர்து’ என்று வழங்குகின்றது. அது ‘ஏர்’ என்ற தாதுவின் அடியாகப் பிறந்த… Read More »எருது

எய்யாமை

சொல் பொருள் தெரியாமை; அறியாமை சொல் பொருள் விளக்கம் தெரியாமை என்பது ஒற்றின் நீக்கமாய் எய்யாமை ஆயிற்று. எய்யாமை – அறியாமை. இதன் உடன் பாடு தெரிதல் என்பது. இங்ஙனம் இருப்ப எய்த்தல் உடன்… Read More »எய்யாமை

எட்டி

சொல் பொருள் விளக்கம் எட்டி காவிதி என்பன தேய வழக்காகிய சிறப்புப்பெயர். (தொல். எழுத்து. 154. நச்.)

எச்சவகை

சொல் பொருள் விளக்கம் எச்சவகை என்பது, சொல்லப்படாத மொழி களைக் குறித்துக் கொள்ளச் செய்தல். அது கூற்றினும் குறிப்பினும் வருதலின் வகை என்றான். (தொல். பொருள். 313. பேரா.)

ஊருணி

சொல் பொருள் உண்பதற்குரிய தண்ணீர் நிறைந்த குளம் ஊருணி எனப்படும் சொல் பொருள் விளக்கம் உண்பதற்குரிய தண்ணீர் நிறைந்த குளம் ஊருணி எனப்படும். ஊரார் உண்ணும் நீரையுடையதாதலால் ஊருணி என்னும் பெயர் அதற்கு அமைந்ததென்பர்.… Read More »ஊருணி

ஊராண்மை

சொல் பொருள் உபகாரியாந் தன்மை சொல் பொருள் விளக்கம் உபகாரியாந் தன்மை; அஃதாவது இலங்கையர் வேந்தன் போரிடைத் தன் தானை முழுதும் படத்தமியனாய் அகப்பட்டானது நிலைமை நோக்கி, அயோத்தியர் இறைமேற் செல்லாது “இன்று போய்… Read More »ஊராண்மை