சொல் பொருள்
(வி.அ) 1. அங்கே, 2. அப்பால், 3. மேல், 4. அப்பொழுது,
சொல் பொருள் விளக்கம்
அங்கே,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
there, beyond, on, over, at that time
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தூங்கு இலை வாழை நளி புக்கு ஞாங்கர் வருடை மட மறி ஊர்வு இடை துஞ்சும் – கலி 50/3,4 தொங்குகின்ற இலைகளையுடைய வாழை மரங்கள் செறிவாக இருக்குமிடத்தில் புகுந்து, அங்கு வருடை மானின் இளம் குட்டி திரிகின்ற இடத்தில் துயில்கொள்ளும் இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர் குடி நிறை வல்சி செம் சால் உழவர் நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டி – பெரும் 196-198 இனிய சுவையுள்ள பருப்புச்சோறைப் பெறுவீர் – அந்நிலத்திற்கு மேல், குடியிருப்பு நிறைந்த, உணவினையுடைய செவ்விய சாலாக உழுகின்ற உழவர்கள் நடை பயின்ற பெரிய எருதுகளை முற்றத்தே நுகத்தைப் பூட்டிக்கொண்டு சென்று அருவி ஆர்க்கும் அணங்கு உடை நெடும் கோட்டு ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினை பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும் – நற் 288/1-3 அருவி ஆரவாரமாய் ஒலிக்கும் தெய்வ மகளிர் வாழும் நெடிய மலையுச்சியில் மேலிருந்துவரும் இளவெயிலைப் பெறுவதற்காக, உயர்ந்த கிளைகளிலிருந்து தோகையையுடைய ஆண்மயில் தன் பெடையோடு ஆடும் தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர் நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி – புறம் 383/2,3 குளிர்ந்த பனி துளிக்கும் புலராத அந்தப் பொழுதில் நுண்ணிய கோல் கட்டப்பட்ட தடாரிப்பறையைக் கொட்டி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்