Skip to content
தம்பலம்

தம்பலம் என்பதன் பொருள்வெற்றிலைப்பாக்கு தம்பலம், இந்திரகோபம், தம்பலப்பூச்சி, கிச்சுக் கிச்சுத் தம்பலம்

சொல் பொருள் விளக்கம்

(பெ) வெற்றிலைப்பாக்கு தம்பலம், இந்திரகோபம், தம்பலப்பூச்சி, கிச்சுக் கிச்சுத் தம்பலம்

சொல் பொருள் விளக்கம்

கிச்சுக் கிச்சுத் தம்பலம் என்பது சிறுவர், சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. இதனை ஈழத்தமிழர் குச்சாட்டம் எனவும் வழங்குவர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Betel with areca-nut;

Scarlet moth, the coccus insect with a crimson velvet-like coat

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வை காண் முது பகட்டின் பக்கத்தின் போகாது
தையால் தம்பலம் தின்றியோ என்று தன்
பக்கு அழித்து கொண்டீ என தரலும் – கலி 65/12-14

வைக்கோலைப் பார்த்த வயதான மாட்டைப் போல என் பக்கத்திலிருந்து போகாமல்
“பெண்ணே, வெற்றிலைபாக்கு போடுகின்றாயோ?” என்று தன்
பையினைத் திறந்து “எடுத்துக்கொள்” என்று தந்தான்;

தில்லை நல்லார், பொதுத் தம்பலங் கொணர்ந்தோ புதல்வா ! எம்மைப் பூசிப்பதே - திருக்கோவையார் ஒளிநெறி.

பார்க்க தம்பலத்தார்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *