திலகம் என்பது ஒரு குறிஞ்சி நிலத்து மரம்.
1. சொல் பொருள்
(பெ) 1. நெற்றிப்பொட்டு, 2. மஞ்சாடி மரம், 3. துறை, பண்பு முதலியவற்றில் சிறந்தவர்
2. சொல் பொருள் விளக்கம்
திலகம் என்பது ஒரு மரம், மலர். மஞ்சாடி அல்லது ஆனைக் குன்றிமணி, பெருங்குன்றி.
நிறுத்தல் அளவைப் பெயர்களுள் பொன்னை நிறுக்கும் அளவை ஒன்று ‘மஞ்சாடி’ என்னும் பெயர்கொண்டது. இது மஞ்சாடி மரத்தின் விதை. இரண்டு குன்றி மணி எடை கொண்டது.
இதன் பூக்கள் சற்று நீளமாயும் பூனை வால் போன்று கூந்தல் கொண்டும் அமைந்திருக்கும். கொட்டைகள் செந்நிறமாயும் பிரகாசமானவையாயும் இருக்கும்
நெற்றியில் வைக்கப்படும் பொட்டு.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a small circular mark on forehead. a cosmetic mark applied on the forehead;
Barbados pride, Caesalpinia gilliesii, Adenanthera pavonina
English: red beadtree, Sandalwood tree, Red sandalwood, Coralwood العربية: مرجان الغابة مصرى: مرجان الغابه বাংলা: রঞ্জনা ދިވެހިބަސް: މަދޮށި فارسی: صندل قرمز ગુજરાતી: રક્તચંદન हिन्दी: बड़ी गुम्ची Bahasa Indonesia: Saga pohon Jawa: Sogok telik 文言: 海紅豆, Madhurâ: Saghâ, മലയാളം: മഞ്ചാടി, मराठी: रतनगुंज, Bahasa Melayu: Pokok saga daun tumpul, polski: Gruczołkowiec pawi, português: Carolina, русский: Аденантера павлинья, සිංහල: මදටිය, Kiswahili: Mshanga, தமிழ்: மஞ்சாடி, తెలుగు: బండి గుర్విన, ไทย: มะกล่ำตาช้าง, lea faka-Tonga: Lopa, Tiếng Việt: Trạch quạch, 粵語: 相思豆, 中文: 海红豆, 中文(中国大陆): 光海红豆, 中文(简体): 海红豆, 中文(繁體): 海紅豆, 中文(香港): 海紅豆, 中文(臺灣): 光海紅豆
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24 நெற்றிப்பொட்டு இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில் போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி – குறி 74 கோங்கப்பூ, மஞ்சாடி மரத்தின் பூ, தேன் மணக்கும் பாதிரிப்பூ
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் - திரு 24 போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி - குறி 74 நாகம் திலகம் நறும் காழ் ஆரம் - மலை 520 திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் - நற் 62/6 நெற்றி விழியா நிறை திலகம் இட்டாளே - பரி 11/99 செய்யாட்கு இழைத்த திலகம் போல் சீர்க்கு ஒப்ப - பரி 32/1 ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம்/ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க - கலி 92/35,36 தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும் - அகம் 389/3 மாக விசும்பின் திலகமொடு பதித்த - அகம் 253/24 எல்லின் கதிர் திரட்டி திலகம் திங்கட்கு இட்டது போல் - தேம்பா:3 56/1 பார் வளர் திலகம் ஒத்தான் பழிப்பு அற விளங்கினானே - தேம்பா:4 46/4
பவள வாள் நுதல் திலகம் இழப்ப - புகார்:4/54 நாகம் திலகம் நறும் காழ் ஆரம் - வஞ்சி:25/18 திலகமும் அளகமும் சிறு கரும் சிலையும் - புகார்:8/74 மரவமும் நாகமும் திலகமும் மருதமும் - மது:13/152 ஒருபெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும் - மணி:26/43 திலகமும் வகுளமும் செம் கால் வெட்சியும் - மணி:3/161 வாங்குபு திலகம் சேர்த்தி திலகனை திருந்த வைத்தாள் - சிந்தா:1 305/4 தமர் இயல் ஓம்பும் தரணி திலகம் நமர் அது மற்று அது நண்ணலம் ஆகி - சிந்தா:1 336/3,4 திங்கள் உகிரில் சொலிப்பது போல் திலகம் விரலில் தான் நீக்கி - சிந்தா:1 350/1 பூமகள் பொலிந்த மார்பன் புவி மிசை திலகம் ஒத்தான் - சிந்தா:1 370/4 சேயவர்க்கும் தோன்றியது ஓர் திலகம் எனும் தகைத்தாய் - சிந்தா:3 595/3 திருந்த செய்து அதன் பின் நங்கை திருவிற்கு ஓர் திலகம் ஒத்தாள் - சிந்தா:3 627/4 தேய்ந்து உக சேர்த்தி மாலை திருமுடி திலகம் கொண்டார் - சிந்தா:3 787/4 இன் இசை கூத்து நோக்கி இருந்தனன் திலகம் அன்னான் - சிந்தா:5 1170/4 சந்து உடை சாரல் சேறி தரணி மேல் திலகம் அன்னாய் - சிந்தா:5 1178/4 திலகம் ஆய திறலோய் நீ தேவர் ஏத்தப்படுவோய் நீ - சிந்தா:5 1244/2 பூமி மேல் திலகம் வைத்து அனைய பொன் நகர் - சிந்தா:6 1448/2 கடல் அணி திலகம் போல கதிர் திரை முளைத்தது அன்றே - சிந்தா:9 2053/4 கிள்ளை வளை வாய் உகிரின் கிள்ளி திலகம் திகழ பொறித்து - சிந்தா:12 2439/2 மண்-பால் திலகம் ஆய் வான் பூத்து ஆங்கு மணி மல்கி - சிந்தா:13 2600/2 திகழ்ந்து எரி விளக்கு என திலகம் ஆயினார் - சிந்தா:13 2640/4 பூமி மா திலகம் எனும் பொன் கிளர் - சிந்தா:13 2855/2 திணி நிலத்து இயன்றது ஓர் திலகம் ஆயினான் - சிந்தா:13 3028/4 சேல் உண் கண்ணியர் சிலம்பொடு திலகமும் திருத்தி - சிந்தா:12 2383/1 தேம் கொள் மாலையும் திலகமும் அணிந்த திண் குணத்த - சிந்தா:12 2387/3 தீட்டரும் திரு நுதல் திலகமே என - சிந்தா:5 1223/3 திலகம் ஆய திறல்அறிவன் அடி - வளையா:1/2
திலகம் கிடந்த திருநுதலாய் அஃதால் - முத்தொள்:12/3 சந்து அகில் திலகம் குரவு தேக்கு ஆரம் தான்றி கோங்கு ஏழிலைம்பாலை - சீறா:1002/1 மடந்தையர் திலகம் போன்ற பாத்திமா வகுத்த மாற்றம் - சீறா:3087/1 இல் என மறுத்து நெற்றி திலகம் தொட்டு இயற்றும் போழ்தில் - சீறா:3178/2 அய்யகோ தமியேன் அகத்து உறை நிதியே ஆடவர் திலகமே அரசே - சீறா:4120/1 இந்த குரிசில் யது குலத்துக்கு எல்லாம் திலகம் எனுமாறு - வில்லி:5 41/1 தன் மரபுக்கு அணி திலகம் ஆன வீரன் தகவு அன்றோ மன்றலுக்கு தாழ்வோ என்றான் - வில்லி:5 55/3 சிந்துர திலகம் தீட்டுவார் ஆகி தனித்தனி திசை-தொறும் சூழ்ந்தார் - வில்லி:12 60/4 பற்றிய திலகம் போல படுதலும் பாங்கர் நின்ற - வில்லி:22 125/3 நீள மால் யானை நெற்றி நிறத்த செம் திலகம் போன்றே - வில்லி:27 160/4 விழி வழி நெருப்பு உருகி வழிய நுதலில் திலகம் வெயில் வழிய முற்றும் நிலவே - வில்லி:28 57/3 சிந்துர தூளியால் திலகம் இட்டனன் என - வில்லி:39 26/2 சிகரி புதையவும் உரம் முழுகவும் நுதல் திலகம் என ஒளி திகழவும் மலைதலின் - வில்லி:44 29/3 திலகம் நோக்கி பல பாராட்டியும் - இலாவாண:19/90 உலகிற்கு எல்லாம் திலகம் போல்வது - மகத:2/46 பால் வெண் கோட்டமும் பனிச்சையும் திலகமும் வேயும் வெதிரமும் வெட்சியும் குளவியும் - உஞ்ஞை:50/29,30 தீ வாய் தோன்றி திலகமும் திரி கோல் - இலாவாண:12/26 திரு நுதல் திலகமும் சுமத்தல் ஆற்றாள் - நரவாண:1/139 பைம்பொன் திலகமொடு பட்டம் அணிந்த - மகத:22/223
திலகம் இது என உலகுகள் புகழ்தரு பொழில் அணி திரு மிழலையே - தேவா-சம்:212/4 திலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்குடி - தேவா-சம்:3070/3 செம்பொன் ஆர் திலகம் உலகுக்கு எலாம் - தேவா-சம்:3321/3 திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டங்குடியாரே - தேவா-சம்:3506/4 தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேல் ஒர் திங்கள் திலகம் பதித்த நுதலர் - தேவா-அப்:74/1 திலகம் மண்டலம் தீட்டி திரிந்திலர் - தேவா-அப்:2006/2 திலகம் ஒப்பது செம்பியர் வாழ் பதி - 1.திருமலை:3 12/2 மானின் வயிற்று அரிதார திலகம் இட்டு மயில் கழுத்து மனவு மணி வடமும் பூண்டு - 3.இலை:3 48/2 வனிதையர் திலகத்தின் மனத்தின் மாண்பையோ - சுந்:3 65/2 தெய்வ மங்கையர்க்கும் எல்லாம் திலகத்தை திலகம் செய்தார் - பால:22 16/4 திலகம் முன் இடுவாரும் சிகழிகை அணிவாரும் - பால:23 29/3 வீர பட்டத்தொடு திலகம் மின்னவே - பால:23 53/4 திலகம் மண் உற வணங்கி நின்று ஒரு மொழி செப்பும் - பால-மிகை:9 40/4 சாகா வர தலைவரில் திலகம் அன்னான் - சுந்:1 72/1 திலகம் மண் உற வணங்கினர் கோயிலின் தீர்ந்தார் - சுந்:9 5/2 சென்று அவன்-தன்னை சார்ந்தாள் மயன் அருள் திலகம் அன்னாள் - சுந்-மிகை:3 17/4 அணி கண்டிகை கவசம் கழல் திலகம் முதல் அகல - யுத்3:31 112/2 அளக வாள் நுதல் அரும்பெறல் திலகமும் அழித்தாள் - அயோ:3 2/4 திலகமே உன் திறத்து அனங்கன் தரு - சுந்:3 100/3
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்