சொல் பொருள்
(பெ) 1. தூய்மை, 2. வலிமை, 3. வெண்மை, 4. ஆதரவு, 5. பகை, 6. தூ! (இகழ்ச்சிக் குறிப்பு)
சொல் பொருள் விளக்கம்
(பெ) 1. தூய்மை, 2. வலிமை, 3. வெண்மை, 4. ஆதரவு, 5. பகை, 6. தூ! (இகழ்ச்சிக் குறிப்பு)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
purity, strength, brightness, whiteness, support, enmity, fie
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும் - குறள் 455. மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும். புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை – திரு 138 புகையை முகந்துகொண்டதைப் போன்ற அழுக்கேறாத தூய உடையினையும் பீடு அழிய கடந்து அட்டு அவர் நாடு அழிய எயில் வௌவி சுற்றமொடு தூ அறுத்தலின் – மது 186-188 பெருமை அழியும்படி வென்று கொன்று, பகைவரின் நாடுகள் அழியும்படி (அவரின்)அரண்களைக் கைக்கொண்டு, (பகைவரைச்)சேர்ந்தாருடைய வலியைப் போக்குதலின், துணை புணர் அன்ன தூ நிற தூவி – நெடு 132 தம் துணையைப் புணர்ந்த அன்னச் சேவலின் வெண்மையான நிறத்தையுடைய (சூட்டாகிய)மயிரால் பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி - திரு 22 குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி - திரு 233 நெடு மயிர் எகின தூ நிற ஏற்றை - நெடு 91 தோடு அமை தூ மடி விரித்த சேக்கை - நெடு 135 தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின் - மலை 51 தூ துளி பொழிந்த பொய்யா வானின் - மலை 75 மா நிலம் சேவடி ஆக தூ நீர் - நற் 0/1 தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் - நற் 52/2 வா பறை விரும்பினை ஆயினும் தூ சிறை - நற் 54/2 துறை போகு அறுவை தூ மடி அன்ன - நற் 70/2 துஞ்சுதியோ இல தூ இலாட்டி - நற் 154/7 துறுகல் அயல தூ மணல் அடைகரை - நற் 243/2 மா கழி மணி பூ கூம்ப தூ திரை - குறு 55/1 மால் வரை இழிதரும் தூ வெள் அருவி - குறு 95/1 துட்கென்றன்று என் தூ நெஞ்சம் - குறு 157/2 தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவி - குறு 235/2 கண் அகன் தூ மணி பெறூஉம் நாடன் - குறு 379/3 தொடர்ந்த குவளை தூ நெறி அடைச்சி - பதி 27/2 தூ இரும் போந்தை பொழில் அணி பொலிதந்து - பதி 51/9 தூ கணை கிழித்த மா கண் தண்ணுமை - பதி 51/33 தூ எதிர்ந்து பெறாஅ தா இல் மள்ளரொடு - பதி 81/34 கழிந்தோர் உடற்றும் கடும் தூ அஞ்சா - பதி 90/5 துரந்து புனல் தூவ தூ மலர் கண்கள் - பரி 7/52 சுடர் மதி கதிர் என தூ நரையோரும் - பரி 23/43 துணி நீரால் தூ மதிநாளால் அணிபெற - கலி 32/6 துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே - கலி 67/20 மாலை நீ தூ அற துறந்தாரை நினைத்தலின் கயம் பூத்த - கலி 118/9 தூ அற துறந்தனன் துறைவன் என்று அவன் திறம் - கலி 129/9 துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி - கலி 135/1 சிறந்தவன் தூ அற நீப்ப பிறங்கி வந்து - கலி 146/16 தூ நீர் பயந்த துணை அமை பிணையல் - அகம் 5/23 மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை - அகம் 13/16 துறை விட்டு அன்ன தூ மயிர் எகினம் - அகம் 34/12 தூ உடை பொலிந்து மேவர துவன்றி - அகம் 136/15 துவர புலர்ந்து தூ மலர் கஞலி - அகம் 141/12 கார் விரை கமழும் கூந்தல் தூ வினை - அகம் 198/5 துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர் - அகம் 355/6 தூ மலர் தாமரை பூவின் அம் கண் - அகம் 361/1 தூ விரி கடுப்ப துவன்றி மீமிசை - புறம் 154/11 தூ இயல் கொள்கை துகள் அறு மகளிரொடு - புறம் 224/6 தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே - புறம் 286/5 தூ வெள் அறுவை மாயோன் குறுகி - புறம் 291/2 புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை - புறம் 311/2 தூ மயிர் குறும் தாள் நெடும் செவி குறு முயல் - புறம் 334/2 காவல் இயற்கை ஒழிந்தேம் யாம் தூ அருவி - ஐந்50:12/2 கார்ப்பார் தமை யாதும் காப்பு இலார் தூ பால - ஏலாதி:54/2
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்