Skip to content

சொல் பொருள்

(வி.எ) தைத்த – செய்யிய எனும் வாய்பாட்டு வினையெச்சம் – பார்க்க – தை 

தைஇய – இட்ட

தைஇய – போர்த்த

தைஇய – உருவாக்கிய

தைஇய – சேர்த்துத்தொடுத்த

தைஇய – உடுத்திய

தைஇய – பதிக்கப்பெற்ற

தைஇய – தடவிய

தைஇய – அலங்கரித்துக்கொண்ட

சொல் பொருள் விளக்கம்

தைத்த – செய்யிய எனும் வாய்பாட்டு வினையெச்சம் – பார்க்க – தை 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 24

திலகம் இட்ட மணம் நாறுகின்ற அழகிய நெற்றியில்

உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் – திரு 129

தோல் போர்த்த தசை கெடுகின்ற மார்பின்

வேலன் தைஇய வெறி அயர் களனும் – திரு 222

வேலன் இழைத்த வெறியாடு களத்திலும்

வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை – நற் 169/8

வெண்மையான பனங்குருத்துடன் சேர்த்துத் தைத்த, மார்பில் அசைகின்ற அழகிய மாலை

தைஇய பூ துகில் ஐது கழல் ஒரு திரை – கலி 85/5

உடுத்தின மென்மையான துகில், மென்மையாய் விலகுகின்ற ஒரு மடிப்புடன்

சீர் மிகு முத்தம் தைஇய
நார்முடிச்சேரல் நின் போர் நிழல் புகன்றே – பதி 39/16,17

சிறப்பு மிகுந்த முத்துக்கள் தைக்கப்பெற்ற
நார்முடிச் சேரலே! உனது போரினைப் புகலிடமாக விரும்பி

தண் கமழ் சாந்தம் தைஇய வளியும் – பரி 21/47

குளிர்ச்சி பொருந்திய கமழ்கின்ற சந்தனத்தைத் தடவி ஏற்றுவரும் காற்றையும்

தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும்
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் – கலி 27/19,20

அழகு செய்துகொண்ட மகளிர் தம் தோழியருடன் சேர்ந்து ஆடுகின்ற,
வையையில் நீண்டுயர்ந்த மணல்மேட்டு இன்ப நுகர்ச்சியையும் அவர் நினைத்துப்பாராரோ?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *