Skip to content

சொல் பொருள்

(வி) 1. குத்து, ஊடுருவு, துளைத்துச்செல், 2. பூக்களைச் சேர்த்து மாலையாகக் கட்டு, 3. அணி, அலங்கரி, 4. மணிகளை வரிசையாகக் கோத்தல்,

2. (பெ) 1. தமிழ் ஆண்டில் பத்தாவது மாதம், 2. ஓர் இசை ஒலிக்குறிப்பு,

நிலத்தில் ஊன்றி நடுவதாம் நாற்று ஊன்றுதல் பொருளில் ‘தை’ என்பது குமரி மாவட்ட வழக்காக உள்ளது

சொல் பொருள் விளக்கம்

தைத்தல் ஊன்றுதல் பொருளது. துணி, தோல் முதலியவற்றில் ஊசியை ஊன்றித் துளைத்தல் தைத்தல், தையல் எனப்படும். அதுபோல் நிலத்தில் ஊன்றி நடுவதாம் நாற்று ஊன்றுதல் பொருளில் ‘தை’ என்பது குமரி மாவட்ட வழக்காக உள்ளது.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

prick, pierce, penetrate, tie, weave as wreath, wear, put on, adorn, string as beads, the tenth month in Tamil year, a way of expressing sound in music

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கால மாரியின் அம்பு தைப்பினும் – புறம் 287/3

கார்காலத்து மழைத்தாரை போல் அம்புகள் வந்து உடம்பில்பட்டுத் துளைக்குமாயினும்

தாரும் தையின தழையும் தொடுத்தன – அகம் 259/2

மாலைகளும் கட்டப்பெற்றன, தழையுடைகளும் தொடுக்கப்பட்டன

சாய் குழை பிண்டி தளிர் காதில் தையினாள்
பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள் – பரி 11/95,96

சாய்ந்து குழைந்த அசோகின் தளிரைத் தன் காதில் செருகியிருந்தவள்,
ஒளிபாயும் குழையையுடையவள் அணிந்திருந்த நீலமலர் இளவெயில் படர்ந்தது போன்று ஆகும்படி சூடிக்கொண்டா

கைவல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகி – நற் 86/5,6

கைவேலைப்பாட்டில் வல்லவனான கம்மியன் மணிகளைக் கோத்துச் செய்த
சுரிதகம் என்னும் அணியைப் போன்ற உருவத்தைக்கொண்டனவாகி

தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ – கலி 59/13

தை மாதத்தில் நீராடிய நோன்பின் பயனை அடைவாயோ?

மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய் – கலி 118/13,14

ஏ மாலையே! ‘தை’யென்று வரும் கோவலரின் தனித்த குழலோசையைக் கேட்டுக்
குமுறுகின்ற நெஞ்சத்தினையுடைய எங்களின் பக்கம் வந்து எம்மைப் பழித்துப்பாராட்டுகிறாய்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *