Skip to content

தொதுக்கனும் பொதுக்கனும்

சொல் பொருள்

தொதுக்கன் – வலிமையற்றவன்
பொதுக்கன் – வலிமையற்றுப் பொதி போலத் தோற்றமளிப்பவன்.

சொல் பொருள் விளக்கம்

கால் தள்ளாடி நடையிடும் வலிமையில்லாதவன் தொதுக்கனாவான்; அவன் மெலிந்தும் காட்சியளிப்பான். ஆனால், பொதுக்கனோ தோற்றத்தில் கனமாக இருப்பான். தொதுக்கன் அளவும் நடக்கவோ செயலாற்றவோ மாட்டான். சிறு செயல் செய்யவும் இளைத்துக் களைத்துப் போய்விடுவான். தொதுக்கன் தொதுக்கட்டி என்றும், பொதுக்கன் பொதுக் கட்டி என்றும் வழங்கப்படுவதுண்டு.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *