Skip to content

தொந்தி தொப்பை

சொல் பொருள்

தொந்தி – பருத்த வயிறு அல்லது வயிறு பருத்துப் போதல்.
தொப்பை – பருத்த வயிற்றில் விழும் மடிப்பு.

சொல் பொருள் விளக்கம்

தொந்தி தொப்பை இரண்டும் பருவயிற்றைக் குறிப்பவையாய் வழக்கில் இருப்பினும் இவ் வேறுபாடு கருதத்தக்கதாம். ‘தொந்திப் பிள்ளையார்’ எனப் பிள்ளையார் பெயருண்டு. ‘தொந்தியப்பன்’ என்பதும் பெயரே; அது பிள்ளையாரைக் கருதியது; ‘மத்தள வயிற்றன்’ என்பார் அருணகிரியார். தொம்பை என்பது தவசம் போட்டு வைக்கும் குதிர் ஆகும். தொய்வு, தொப்பு, தொப்புள் என்பவை தொப்பையை விளக்கும்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *