Skip to content

தோட்டம் தோப்பு

சொல் பொருள்

தோட்டம் – கீரை, செடி, கொடி பயிரிடப்படும் இடம்.
தோப்பு – மரம் வைத்து வளர்க்கும் இடம்

சொல் பொருள் விளக்கம்

தோட்டம், பூந்தோட்டம், காய்கறித்தோட்டம் என்பவற்றால் விளங்கும். தோப்பு, மாந்தோப்பு, புளியந்தோப்பு என்பவற்றால் விளங்கும். தோட்டம் தோப்புப் பெயர்களால் பல ஊர்ப் பெயர்களும் தெருப் பெயர்களும் விளங்குதல் எவரும் அறிந்ததே. தோடு-தொகுதி, கூட்டம். தோப்பு-தொகுப்பு. “தோட்டமும் தோப்பும் எங்களுக்கு உண்டு” என்பது வளமைப் பேச்சு.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *