Skip to content

சொல் பொருள்

1. (வி.எ) தோன்று என்ற வினைச்சொல்லின் வினையெச்சம்,  2. செங்காந்தள்,  3. ஒரு மலை,

சொல் பொருள் விளக்கம்

தோன்று என்ற வினைச்சொல்லின் வினையெச்சம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

appear, malabar glory lily, a mountain

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு
அரியம் ஆகிய_காலை
பெரிய நோன்றனீர் நோகோ யானே – குறு 178/5-7

தொழுது காணும் பிறையைப் போல உமக்குத் தோன்றி, நாம் உமக்கு
அரியவளாய் இருந்த பொழுதில்
பெரிதான வருத்தத்தைப் பொறுத்துக்கொண்டிருந்தீரோ? வருந்துகிறேன் நான்

குவி இணர் தோன்றி ஒண் பூ அன்ன – குறு 107/1

குவிந்த கொத்தான செங்காந்தளின் ஒளிவிடும் பூவைப் போல

வான் தோய் உயர் சிமை தோன்றி கோவே – புறம் 399/3

வானளாவ உயர்ந்த உச்சியையுடைய தோன்றிமலைக்குத் தலைவனே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *