சொல் பொருள்
1. (வி) துளையிடு, 2 (பெ) புயம்
சொல் பொருள் விளக்கம்
துளையிடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bore, shoulder
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தோளா முத்தின் தெண் கடல் பொருநன் – அகம் 137/13 துளையிடாத புதிய முத்துக்கள் விளையும் தெளிந்த கடலையுடைய வீரன் தாழ் மென் கூந்தல் தட மென் பணை தோள் மடந்தை மாண் நலம் புலம்ப – அகம் 21/4,5 தாழ்ந்த மெல்லிய கூந்தல், பருத்த மெல்லிய மூங்கில்(போன்ற)தோள்கள்(கொண்ட) தலைவியின் மாட்சிமையுடைய பெண்மைநலம் தனிமையில் வருந்த, படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் முடலை யாக்கை முழு வலி மாக்கள் – நெடு 31,32 பச்சிலை கலந்த தலை மாலையினையும், பருத்த அழகினையும் வலியினையும் உடைய இறுகின தோளினையும், முறுக்குண்ட உடம்பினையும், மிகுந்த உடற்பலமும் உடைய மிலேச்சர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்