சொல் பொருள்
1 (வி) 1. நினை, எண்ணு, 2. ஆராய், 3. தேடு, 4. விரும்பு, 5. அணுகு, செல்,
2 (பெ) தேசம், ஆளுகைப்பகுதி,
சொல் பொருள் விளக்கம்
நினை, எண்ணு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
think, consider, examine, investigate, seek, pursue, desire, approach, seek access, country, ruling area, kingdom
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தமவும் பிறவும் ஒப்ப நாடி – பட் 209 தம்முடையவற்றையும் பிறருடையவற்றையும் ஒன்றாக எண்ணி பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே – நற் 32/7-9 பெரியவர்கள் முதலில் ஆராய்ந்து நட்புச் செய்வரே அன்றி, நட்புச் செய்தபின் அவரைப்பற்றி ஆராயமாட்டார், தம்மைச் சார்ந்தவரிடத்து இன் துணை பிரிந்தோர் நாடி தருவது போலும் இ பெரு மழை குரலே – நற் 208/11,12 இனிய துணையைப் பிரிந்தவரை தேடிச் சென்று அவரை மீண்டும் கொணர்வது போல் உள்ளது இந்தப் பெரிய மழையின் முழக்கம் அன்பு அற சூழாதே ஆற்று இடை நும்மொடு துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது இன்பமும் உண்டோ எமக்கு – கலி 6/9-11 நம்மிடையே உள்ள அன்பு அழிந்துவிட நினையாது, போகும் வழியில் உம்முடன் துன்பகாலத்தில் துணையாக நான் கூட இருப்பதை விரும்பினால், அதைத் தவிர இன்பமான செய்தி வேறு உண்டோ எனக்கு பாடல் சால் சிறப்பின் சினையவும் சுனையவும் நாடினர் கொயல் வேண்டா நயந்து தாம் கொடுப்ப போல் தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண் – கலி 28/1-3 பாடிப் போற்றத்தக்க சிறப்பினையுடைய கிளைகளிலும், சுனைகளிலும், மிகுந்த சிரமப்பட்டு அணுகிக் கொய்யவேண்டாத அளவுக்கு விரும்பித் தாமே கொடுப்பவை போல், மலர்ந்த பூக்கள் மணக்கும் மாலைகளைக் கட்டிச் சூடிக்கொள்வாருக்காக, காவிரி புரக்கும் நாடு கிழவோனே – பொரு 248 காவிரியாறு பாதுகாக்கும் நாட்டை உரித்தவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்