நாய் என்பது ஒரு விலங்கு
1. சொல் பொருள்
(பெ) நாய் அனைத்துண்ணி பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு இனமாகும்.
பார்க்க ஞமலி, ஞாளி, செந்நாய், செல்நாய்
2. சொல் பொருள் விளக்கம்
சங்க காலத்தில் நாய்களை வளர்த்து வந்தனர். வீட்டு விலங்குகளென்று சங்க நூல்களில் நாய் ஒன்று தான் கூறப்பட்டுள்ளது . மனை வாழ் ஞமலியைப் பற்றி பல செய்திகள் வருகின்றன . வேட்டை நாயைப் பற்றியும் செய்திகள் காணப்படுகின்றன . மான்களையும் , காட்டுப் பன்றியையும் வேட்டையாட வேட்டை நாய்களைப் பயன்படுத்தியுள்ளனர் வேட்டுவர்கள் வேட்டை நாயைப் பயன்படுத்தினர் .
கானுயர் வாழ்க்கைக் கதநாய் வேட்டுவர் ” என்று புறநானூறு ( 33 ) கூறுகின்றது .
நாயை – ஞமலி என்றும் , ஞாளி என்றும் அழைத்தனர். விலங்குகளில் நாய்தான் மனித வரலாற்றில் மிகப் பழங்காலத்தில் பழக்கப் படுத்தப்பட்டது
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி – பொரு 42
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ – சிறு 17
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் – சிறு 132
தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர் – பெரும் 125
காவலர் கடுகினும் கத நாய் குரைப்பினும் – குறி 240
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ – மலை 177
கோள் நாய் கொண்ட கொள்ளை – நற் 82/10
கடும் குரல் பம்பை கத நாய் வடுகர் – நற் 212/5
முயல் வேட்டு எழுந்த முடுகு விசை கத நாய்/நன் நா புரையும் சீறடி – நற் 252/10,11
ஆசு இல் தெருவின் நாய் இல் வியன் கடை – குறு 277/1
கொலை வெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப – கலி 23/16
காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன் – கலி 144/20
நாய் உடை முது நீர் கலித்த தாமரை – அகம் 16/1
கல்லா நீள்மொழி கத நாய் வடுகர் – அகம் 107/11
இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட – அகம் 118/5
புலி கணத்து அன்ன நாய் தொடர் விட்டு – அகம் 158/15
பால் நாய் துன்னிய பறை கண் சிற்றில் – அகம் 167/17
ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட – அகம் 182/5
வய நாய் எறிந்து வன் பறழ் தழீஇ – அகம் 248/2
நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே – அகம் 318/15
கற்று உரி குடம்பை கத நாய் வடுகர் – அகம் 381/7
கான் உறை வாழ்க்கை கத நாய் வேட்டுவன் – புறம் 33/1
நரை மூதாளர் நாய் இட குழிந்த – புறம் 52/14
மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய்/நோன் சிலை வேட்டுவ நோய் இலை ஆகுக – புறம் 205/8,9
கோடு துவையா கோள் வாய் நாயொடு/காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு – நற் 276/1,2
பரியல் நாயொடு பன் மலை படரும் – அகம் 28/7
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது