சொல் பொருள்
ஒரு சேர மன்னன்
சொல் பொருள் விளக்கம்
ஒரு சேர மன்னன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a chera king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடம்பு முதல்தடிந்த கடும் சின முன்பின் நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி – பதி 20/4,5 (பகைவரின் காவல்மரமாகிய) கடம்பினை அடியோடு வெட்டி வீழ்த்தி அவரையும் வென்றழித்த மிக்க சினமும் மெய்வன்மையுமுடைய நெடுஞ்சேரலாதனாவான். அவன் சூடிய கண்ணி வாழ்வதாக பதிற்றுப்பத்து என்னும் நூலுள், இரண்டாம் பத்துப் பாடல்கள் இவனைப் பற்றியன. குமட்டூர்க் கண்ணனார் இவனைப் பாடியுள்ளார். இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்று சிறப்பித்துக் கூறப்படுகிறான்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்