Skip to content

நெட்டுருட்டு

சொல் பொருள்

நெடிய உருட்டு, தாளவகை

சொல் பொருள் விளக்கம்

நெடிய உருட்டு, தாளவகை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a kind of time-measure in music

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வட்டு உருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டு
சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து
போர் ததும்பும் அரவம் போல்
கருவி ஆர்ப்ப கருவி நின்றன குன்றம் – பரி 18/42-45

சூதில் வட்டு உருட்டுவதில் வல்லவனே! உன் மலையில், நெட்டுருட்டு என்னும்
தாளவகை மிகுந்து ஒலிக்கும் ஒலியுடன் சிறந்து,
போரில் மிகுத்து எழும் ஆரவாரம் போல
இசைக்கருவிகள் ஆரவாரிக்க, கூட்டமான மேகங்களும் அவற்றுடன் முழங்கி நின்றன;

– நெட்டுருட்டு – நெடிய உருட்டு – தாளவகை – பெ.சுப்பிரமணியன் உரை (NCBH), ச.வே.சு உரை

– நெட்டுருட்டுச் சீர் என்றது மலைப்பகுதிகளில் வருகின்ற தேர் உருள்கள் எழுப்புகின்ற ஒலியினை
– புலியூர்க்கேசிகன் உரை விளக்கம்

– நெட்டுருட்டு – long musical notes (with drums, with lutes) – Vaidehi Herbert translation

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *