Skip to content

சொல் பொருள்

நொறுக்கு, உடை, செறிவாக இரு, நெருங்கிவா

சொல் பொருள் விளக்கம்

நொறுக்கு, உடை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

break to pieces, be dense and crowded, approach closely

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வரு புனல் நெரிதரும் இகு கரை பேரியாற்று – அகம் 137/7

வரும் நீர் உடைத்திடும் கரைந்து மெலிந்த கரையினையுடைய பெரிய ஆறாகிய காவிரியின்

இடை நிலம் நெரிதரு நெடும் கதிர் பல் சூட்டு – அகம் 236/5

இடைநிலத்தில் செறிந்துள்ள நீண்ட கதிரினையுடைய பல நெற்கட்டுகளை

முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி
திளையா கண்ண வளைகுபு நெரிதர
நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம் – குறி 131-133

மூங்கில்)முளை(போலும்) கூர்மையுள்ள பற்களையுடைய, பெரிய நகங்களையுடைய, நாய்
இமையாத கண்களையுடையவாய் (எம்மை)வளைத்துக்கொண்டு மேலேமேலே நெருங்கிவருகையினால்,
அஞ்சிநடுங்கியவராய் (இருப்பை விட்டு)எழுந்து, (எம்)நல்ல கால்கள் தள்ளாட

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *