Skip to content

சொல் பொருள்

சுருண்டிரு, அலையலையாகு, பூவின் புறவிதழை ஒடி, செறிந்திரு, செறித்துவை, வளைவு, சுருள், பாதை, கோட்பாடு, ஒழுக்கநியதி, வழிமுறை, நல்லொழுக்கம்,

சொல் பொருள் விளக்கம்

சுருண்டிரு, அலையலையாகு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be curly, wavy as one's hair, strip a flower of its calyx, be dense, pack closely, curl, way, path, road, principle, code of conduct, means, method, path of virtue, righteousness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அறல் என நெறிந்த கூந்தல் – அகம் 213/23

கருமணல் போல் நெளிநெளியாக வளைந்த கூந்தலையும்

வயங்கு ஒளி
நிழல்_பால் அறலின் நெறித்த கூந்தல் – அகம் 265/7,8

விளங்கும் ஒளி வாய்ந்த
நிழற்கண்ணுள்ள அறல் போல நெளிந்த கூந்தலினையும்

நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள்
பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் – கலி 143/31,32

நெய்தல் பூவின் புறவிதழை நீக்கி மாலை கட்டுவதில் அவன் வல்லவன், நீண்ட மென்மையான தோள்களின் மேல்
எய்யக்கூடிய கரும்புவில்லை எழுதுவதிலும் அவன் வல்லவன்

விசும்பு உற நிவந்த மா தாள் இகணை
பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன – அகம் 131/1,2

வானளாவ உயர்ந்த கரிய அடியினையுடைய இகணை மரத்தின்
பசிய நிறமுடைய மெல்லிய இலைகளை நெருங்கச் செறித்து வைத்தாற்போன்ற

குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்_மகள் – பெரும் 162

குறிதாகிய சுருளைக்கொண்ட கொண்ட மயிரினையும் உடைய, இடைமகள்

வரை சேர் சிறு நெறி வாராதீமே – நற் 336/11

மலையை அடுத்த சிறிய வழியில் வராமலிருப்பீராக!

அற நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி – மது 500

அறக்கோட்பாடுகளினின்றும் தவறாது, நல்வழியே நடந்து

அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும் – புறம் 184/5,6

அறிவுடைய அரசன் இறைகொள்ளும் வழிமுறைகளை அறிந்து கொள்ளின்
கோடிப் பொருளினை ஈட்டிக்கொடுத்து அவன் நாடு மிகவும் தழைக்கும்

அறம் அற கண்ட நெறி மாண் அவையத்து – புறம் 224/4

அறத்தைத் தெளிய உணர்ந்த ஒழுக்கம் மாட்சிமைப்பட்ட அவைக்களத்தின்கண்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *