Skip to content

சொல் பொருள்

பார், கனிவுடன் பார், எண்ணிப்பார், ஆராய், கவனத்தில் கொள்

பார்வை, தோற்றப்பொலிவு, அறிவு, 

சொல் பொருள் விளக்கம்

பார், கனிவுடன் பார், எண்ணிப்பார், ஆராய், கவனத்தில் கொள், பார்வை, தோற்றப்பொலிவு, அறிவு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

look at, look at kindly, look into, consider, take to mind, sight, countenance, knowledge

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செறுவர் நோக்கிய கண் தன்
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே – புறம் 100/10,11

பகைவரை வெகுண்டு பார்த்த கண் தன்னுடைய
புதல்வனைப் பார்த்தும் சிவப்பு அமையாவாயின

அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி
சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய
பூ கமழ் கூந்தல் கொடிச்சி
நோக்கவும் படும் அவள் ஒப்பவும் படுமே – ஐங் 290

அறத்தைப் புரியும் செங்கோல் ஆட்சியையுடைய மன்னனைக் காட்டிலும், தாம் மிகவும்
சிறந்தன போலும் இந்தக் கிளிகள், சுடர்விடும்
பூக்கள் மணக்கும் கூந்தலையுடைய இந்தக் குறிஞ்சிப் பெண்ணால்
கனிவுடன் பார்க்கவும் படும், அவளால் கடிந்து ஓட்டவும் படுமே!

புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை – புறம் 329/7,8

வேந்தராகிய செல்வர்கட்கு உண்டான துன்பத்தை எண்ணிப்பாராமல், இரவலர்க்கு
குறைவறக் கொடுக்கும் வள்ளன்மை

அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான் நயம் செய்யான் – கலி 120/1

அருள் முற்றிலும் அற்றுப்போன தோற்றமுடையவன், அறநெறியைக் கவனத்தில் கொள்ளாதவன், நல்லவற்றைச் செய்யாதவன்,

நோக்கு நுழைகல்லா நுண்மைய பூ கனிந்து
அரவு உரி அன்ன அறுவை நல்கி – பொரு 82,83

பார்வை நுழைய முடியாத நுண்மையை உடையதும், பூத்தொழில் நன்கமைந்ததும்,
(மென்மையால்)பாம்பின் தோலை ஒத்ததும் ஆன துகிலை நல்கி,

நோய் இகந்து நோக்கு விளங்க – மது 13

பிணிகள் நீங்கி அழகு விளங்க

எ வகை செய்தியும் உவமம் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள்_வினைஞரும் பிறரும் கூடி – மது 516-518

பல வகைப்பட்ட தொழில்களையும் ஒப்புக்காட்டிக்
கூரிதாக உணர்ந்த கூரிய அறிவினையுடைய
ஓவியரும், பிறரும் கூடி,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *