சொல் பொருள்
(பெ) 1. வயல், 2. வயல்வெளி, 3. பொய்கை, நீர்நிலை
சொல் பொருள் விளக்கம்
1. வயல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
paddy field, agricultural land, tank
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பழன மஞ்ஞை உகுத்த பீலி – புறம் 13/10 வயலிடத்து மயில் உதிர்த்த பீலி கண்பு மலி பழனம் கமழ துழைஇ வலையோர் தந்த இரும் சுவல் வாளை – மலை 454,455 சம்பங்கோரை நெருங்கிவளர்ந்த வயல்வெளிகள் (சேற்று)மணம்வீச (கைகளினால்)துழாவி, வலைகொண்டு மீன்பிடிப்போர் கொண்டுவந்த பெரிய கழுத்தையுடைய வாளைமீன் கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் பழன வாளை கதூஉம் ஊரன் – குறு 8/1,2 வயல்வெளியிலுள்ள மா மரத்தில் விளைந்து உதிர்ந்த இனிய பழத்தை பொய்கையின் வாளைமீன் கவ்வும் ஊரையுடைய தலைவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்