சொல் பொருள்
(வி) 1. (உடை, மாலை,ஆபரணம் முதலியவை) அணி, தரி, உடுத்து, 2. சூடு, 3. அலங்கரி, 4. செய், படை, உருவாக்கு, 5. ஓவியம் தீட்டு, 6. செய்யுள் அமை, கவிதை, கதை ஆகியவை இயற்று, 7. கட்டு, 8. முடை, பின்னு, 9. (பூக்கள் போன்றவற்றைத்)தொடு, 10. உண்டாகு, ஏற்படு,
சொல் பொருள் விளக்கம்
1. (உடை, மாலை,ஆபரணம் முதலியவை) அணி, தரி, உடுத்து
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
put on (as clothes, garland, jewels), wear, decorate, adorn, make, create, paint, draw, compose a poetry, write fiction, string, bind, plait, as an ola basket, link together; to string, as beads; come into existence
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மகளிர் கோதை மைந்தர் புனையவும் மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும் – பரி 20/20,21 மகளிர் அணிதற்குரிய மாலைகளை மைந்தர் அணிந்துகொள்ளவும்,மைந்தர்களின் குளிர்ச்சியான மாலைகளை மகளிர் சூடிக்கொள்ளவும், நெறி இரும் கதுப்பின் கோதையும் புனைக – அகம் 269/2 நெளிந்த கரிய கூந்தலில் மாலையையும் நீ சூடிக்கொள்க வேலன் புனைந்த வெறி அயர் களம்-தொறும் – குறு 53/3 வேலன் ஒப்பனைசெய்த வெறியாடும் களங்கள்தோறும் கைவல் கம்மியன் கவின் பெற புனைந்த செம் கேழ் வட்டம் சுருக்கி – நெடு 57,58 கை(வேலைப்பாட்டில்) சிறந்த கைவினைக்கலைஞன் அழகுபெறச் செய்த சிவந்த நிறத்தையுடைய விசிறி (மூடிச்)சுருக்கிடப்பட்டு, புனையா ஓவியம் கடுப்ப – நெடு 147 முற்றிலும் தீட்டப்பெறாத கோட்டுச் சித்திரத்தை ஒப்ப(தலைவி அமர்ந்திருக்க) நாவின் புனைந்த நன் கவிதை மாறாமை – பரி 6/8 தம் நாவால் இயற்றிய(பாடிய) வையை ஆற்றைப் பற்றிய நல்ல கவிதைகள் பொய்படாமல் நிலைநிற்கச் செய்ய, கணையர் கிணையர் கை புனை கவணர் – நற் 108/4 அம்புகளோடும், கிணைப்பறையோடும், கையில் கட்டப்பட்ட கவண்களோடும் போழில் புனைந்த வரி புட்டில் – கலி 117/8 பனங்குருத்து நாரால் முடைந்து கட்டப்பட்ட கூடை” வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய் – நற் 155/2 பெரிய இதழ்களையுடைய நெய்தல் பூக்களாம் மாலையையும் தொடுக்கமாட்டாய்; இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் – நற் 330/5 இருள் உண்டாகக் கிளைத்திருக்கும் மருதமரத்தின் இனிய நிழலில் படுத்திருக்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்