சொல் பொருள்
(பெ) பெரிய துறைமுகம்,
சொல் பொருள் விளக்கம்
பெரிய துறைமுகம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
large seaport
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழை மாய் காவிரி கடல் மண்டு பெருந்துறை – அகம் 123/11 ஓடக்கோலும் மறையும் நீர்ப்பெருக்கையுடைய காவிரி கடலில் கலக்கும் பெரிய துறைமுகத்தில் இரங்கு நீர் பரப்பின் கானல் அம் பெருந்துறை தனம் தரு நன் கலம் சிதைய தாக்கும் சிறு வெள் இறவின் குப்பை அன்ன – அகம் 152/6-8 ஒலிக்கும் நீர்ப்பரப்பினையுடைய கானலம் பெருந்துறை என்னும் பட்டினத்தே பொன்னைக் கொண்டுவரும் நல்ல மரக்கலம் சிதையுமாறு தாக்குகின்ற சிறிய வெள்ளிய இறாமீனின் தொகுதி போன்ற குடாஅது இரும் பொன் வாகை பெருந்துறை செருவில் பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய – அகம் 199/18-20 மேற்கின்கண்ணதாகிய பெரிய பொன்னினையுடைய வாகைமரம் நிற்கும் பெருந்துறை என்னுமிடத்து நிகழ்ந்த போரில் பொற்பூண் அணிந்த நன்னன் என்பான் போரிட்டு களத்தில் மடிய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்