Skip to content

சொல் பொருள்

பொரி – 1. (வி) 1. மரப்பட்டை, தோல் ஆகியவற்றில் பொருக்கு வெடி,

சொல் பொருள் விளக்கம்

1. மரப்பட்டை, தோல் ஆகியவற்றில் பொருக்கு வெடி, 2. அனலில் அல்லது சூட்டில் நெல், சோளம் முதலியன வெந்து, பெரிதாகி வெடி, 3. எண்ணெயில் வறு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be dried up and shrivelled, as the skin/bark of a tree, be parched or puffed, fry in oil

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பொரி அரை வேம்பின் புள்ளி நீழல் – நற் 3/2

பொரிந்துபோன அடிமரத்தை உடைய வேம்பின் புள்ளிபுள்ளியான நிழலில்

அறு நீர் பைம் சுனை ஆம் அற புலர்தலின்
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும் – அகம் 1/12,13

நீர் அற்ற பசுமையான சுனைகள் ஈரப்பசையே இன்றிக் காய்ந்துபோனதால்
நெல்விழுந்தால் பொரிந்துபோகும் அளவு வெம்மையுடைய 

மீன் தடிந்து விடக்கு அறுத்து
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில் – பட் 176,177

மீனை வெட்டி, (அதனுள் இருக்கும்)வேண்டாத பகுதிகளை நீக்கி,
(அதன்)தசையினைப் பொரிக்கும் ஓசையெழும்பும் முற்றத்தினையும்,

முன்றில்
நனை முதிர் புன்கின் பூ தாழ் வெண் மணல்
வேலன் புனைந்த வெறி அயர் களம்-தொறும்
செந்நெல் வான் பொரி சிதறி அன்ன – குறு 53/1-4

திறந்த வெளியில்,
அரும்புகள் முதிர்ந்த புன்கமரத்தின் பூக்கள் உதிர்ந்துகிடக்கும் வெள்ளை மணல்,
வேலன் ஒப்பனைசெய்த வெறியாடும் களங்கள்தோறும்
செந்நெல்லின் வெள்ளைப் பொரி சிதறியதைப் போல் தோன்றும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *