Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மருதநிலத் தலைவன், 

2. கணவன், 

சொல் பொருள் விளக்கம்

மருதநிலத் தலைவன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

chief of an agricultural tract

husband

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்
இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே – நற் 70/8,9

வயல்களையுடைய நல்ல ஊரினையுடைய எனது காதலரிடம் சென்று என்னுடைய
அணிகலன்கள் கழன்றுபோகும் துன்பத்தை இதுவரை சொல்லாதிருக்கின்றாய்!

அம்ம வாழி தோழி மகிழ்நன்
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள்
அழுப என்ப அவன் பெண்டிர் – ஐங் 32/1-3

தோழியே கேட்பாயாக! எம் தலைவனான கணவன்
ஒரே ஒருநாள் நமது வீட்டுக்கு வந்ததற்காக, ஏழு நாட்கள்
அழுதிருந்தனர் என்று சொன்னார்கள், அவனது பரத்தைப் பெண்டிர்

பொதுவாக ஊடலும் ஊடல் நிமித்தமும் என்ற உரிப்பொருளைக் கொண்ட மருதத்திணைப் பாடல்களில் வரும்
பாடல் தலைவன் மகிழ்நன் எனப்படுவான்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *