சொல் பொருள்
(பெ) மிகுந்த வலிமை,
சொல் பொருள் விளக்கம்
மிகுந்த வலிமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Great strength
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆகுபெயராக மிகுந்த வலிமையுடைய ஒருவனையும் குறிக்கும்.Person of great strength சிறப்பாக, முருகன் என்ற தெய்வத்தைக் குறிக்கும், Lord Murugan சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி போர் மிகு பொருந குருசில் – திரு 275,276 சூரபன்மாவின் குலத்தை இல்லையாக்கின வலிமையுடைமையால் மதவலி என்னும் பெயரையுடைத்தோய், போர்த்தொழிலில் மிகுகின்ற வீரனே, தலைவனே ஒன்பதிற்று தட கை மன் பேராள பதிற்று கை மதவலி நூற்று கை ஆற்றல் – பரி 3/39,40 ஒன்பது பெரிய கைகளைக் கொண்ட புகழ் நிலைபெற்ற பேராளனே! பத்துக் கைகளைக் கொண்ட மிகுந்த வலிமை கொண்டவனே! நூறு கைகளைக் கொண்ட ஆற்றலாளனே! வில் ஏர் வாழ்க்கை சீறூர் மதவலி – புறம் 331/2 வில்லைக்கொண்டு வேட்டையாடி வாழும் வாழ்க்கையையுடைய சீறூருக்குரியவனாகிய மிக்க வலிமையுடைய தலைவன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்