சொல் பொருள்
(பெ) ஒரு சங்ககால மன்னன்,
நடு
வேர்ச்சொல்லியல்
இது mid என்னும் ஆங்கில சொல்லின் மூலம்
இது மத்தி என்னும் சமற்கிருத சொல்லின் மூலம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a chieftain belonging to sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மத்தி சங்ககால மன்னர்களில் ஒருவன். இவனது தலைநகர் வெண்ணி. மத்திக்கும் கல்லா எழினி என்பவனுக்கும் இடையே போர் மூண்டது. போரில் கல்லா எழினியின் பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து மத்தி தன் கோட்டையின் வாயில் கதவில் பதித்துக்கொண்டான். பதித்த பல் வெண்மணி போல் விளங்கியதால் வெண்மணி என்னும் ஊரின் பெயரே வெண்மணிவாயில் என வழங்கப்படுவதாயிற்று. இந்த மத்தியின் நாட்டில் இருந்த ஓர் ஊர் கழார். அது காவிரிக்கரையில் இருந்தது. வெண்மணிவாயில் என்பது இவன் நாட்டில் இருந்த ஓர் ஊர் என்றும், கழார் என்னும் ஆற்றங்கரையூர் இவனது தலைநகர் என்றும் கூறுவர். இவன் பரதவன் கோமான் என்றும் கூறப்படுதலால்,இவனது ஊர் கடற்கரையை ஒட்டி இருந்த ஆற்றங்கரையூர் என்பது பெறப்படும். கைவண் மத்தி கழாஅர் அன்ன – ஐங் 61/3 வள்ளண்மை உள்ள மத்தி என்பானின் கழார் என்னும் ஊரைப் போன்ற பல் வேல் மத்தி கழாஅர் அன்ன எம் – அகம் 6/20 பல வேற்படையினையுடைய மத்தி என்பானது கழார் என்னும் ஊரினை ஒத்த கடுஞ் சின வேந்தன் ஏவலின் எய்தி, நெடுஞ் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய வன்கண் கதவின் வெண்மணி வாயில், மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை – அகநானூறு 211/11-15 மிக்க சினங்கொண்ட சோழமன்னனது ஏவலாற் சென்று, நெடும் சேய்மைக்கண்னதாகிய நாட்டில் முதற்படையில் அகப்பட்டுக்கொண்ட கல்லாத எழினி என்பானின் பல்லைப் பறித்துவந்து பதித்த வன்மை பொருந்திய கதவினையுடைய வெண்மணி என்னும் ஊரின் வாயிலிடத்தே மத்தி என்பவனால் நாட்டப்பட்ட கல்பொருந்திய குளிர்ந்த துறையில் வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான் பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை – அகம் 226/7,8 வலிய வில்லைத் தாங்கிய வலிமைபொருந்திய தோள்களையுடைய பரதவர்கட்குத் தலைவனாகிய பல வேற்படைகளையுடைய மத்தி என்பானது கழார் என்னும் பதியின் துறையின் முற்றத்தே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
இது ஒரு மூலச்சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்