மறி என்பது ஆடு, மான் இவற்றின் இளங்கன்று
1. சொல் பொருள்
1. (வி) 1. தலைகீழாகு, 2. மடங்கு, 3. முறுக்கப்படு
2. (பெ) ஆடு, மான் இவற்றின் இளமை,
பார்க்க மை துரு துருவை யாடு வெள்யாடு புருவை வெண்மறி
2. சொல் பொருள் விளக்கம்
தலைகீழாகு
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
be turned upside down, get folded, be twisted, young of sheep, deer, etc.,
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்று
கருமறி காதின் கவை அடி பேய்மகள் – சிறு 196,197
தீச்சுவாலை தலைகீழானது போன்ற நாவினையும், ஒளிரும் பற்களையும்,
வெள்ளாட்டு(க் காதினைப்போன்ற) காதுகளையும், பிளந்த பாதங்களையும் உடைய பேய்மகள்
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை – முல் 59
குதிரைச் சவுக்கு வளைந்துகிடக்கின்ற, மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையையும்,
எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி – கலி 15/5,6
வலிமை மிகுந்த கழுத்தினையும், வன்மையான பார்வையினையும், கலைமானின்
கொம்பு போல திருக்குண்டும் முறுக்குண்டதுமாய் விழுகின்ற தாடியையும்,
இரும் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன் – பரி 5/62
கரிய கண்ணையுடைய வெள்ளாட்டின் அழகிய குட்டியாகக் கொடுத்தான்;
செ வரை சேக்கை வருடை மான் மறி
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி – குறு 187/1,2
செம்மையான மலையில் வாழும் வருடைமானின் குட்டி
தன் தாயின் மடியிலிருந்து பொழியும் இனிய பாலை வயிறாரக் குடித்து
சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து – திரு 218
கருமறி காதின் கவை அடி பேய்மகள் – சிறு 197
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து – நற் 47/9
செ வரை சேக்கை வருடை மான் மறி/சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி – குறு 187/1,2
பறி உடை கையர் மறி இனத்து ஒழிய – குறு 221/2
மறி குரல் அறுத்து தினை பிரப்பு இரீஇ – குறு 263/1
நவ்வி நாள் மறி கவ்வி கடன் கழிக்கும் – குறு 282/3
சிறு மறி கொன்று இவள் நறு நுதல் நீவி – குறு 362/4
மறி உடை மான் பிணை கொள்ளாது கழியும் – ஐங் 354/2
மறி இடைப்படுத்த மான் பிணை போல – ஐங் 401/1
மறி உடை மான் பிணை உகள – ஐங் 434/2
இரும் கண் வெள் யாட்டு எழில் மறி கொடுத்தோன் – பரி 5/62
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று – பரி 9/8
மகர மறி கடல் வைத்து நிறுத்து – பரி 23/72
நுரையுடன் மதகு-தொறு இழிதரு புனல் கரை புரளிய செலும் மறி கடல் – பரி 24/66
வருடை மட மறி ஊர்வு இடை துஞ்சும் – கலி 50/4
மறி திரை வருந்தாமல் கொண்டு ஆங்கு நெறி தாழ்ந்து – கலி 121/21
கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி – அகம் 18/3
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி – அகம் 34/6
மறி துரூஉ தொகுத்த பறி புற இடையன் – அகம் 94/4
உள் இல் வயிற்ற வெள்ளை வெண் மறி/மாழ்கி அன்ன தாழ் பெரும் செவிய – அகம் 104/9,10
மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம் – அகம் 242/12
தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ – அகம் 274/10
மறி கொலைப்படுத்தல் வேண்டி வெறி புரி – அகம் 292/4
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – அகம் 304/8
மறி உடை மட பிணை தழீஇ புறவின் – அகம் 314/5
குறு நெடும் துணைய மறி புடை ஆட – அகம் 371/4
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – புறம் 23/19
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த – புறம் 197/10
மா மறி பிண்டம் வாலுவன் ஏந்த – புறம் 372/9
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்