Skip to content

சொல் பொருள்

(வி) 1. மறை, 2. ஒளிகுன்று, 3. கொல், 4. அழி, சிதை,  5. முடிவுக்கு வா, 6. ஒழி, இல்லாமற்போ, 7. இற, உயிர்விடு, 8. தீட்டு, கூராக்கு,  9. கெடு, தப்பு,

சொல் பொருள் விளக்கம்

மறை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

hide, conceal, lose brightness, kill, destroy, devastate, come to an end, cease to exist, disappear, die, grind and sharpen, become spoiled, fail

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மழை மாய் மதியின் தோன்றுபு மறைய – மது 452

மேகங்களில் மறையும் திங்களைப் போன்று தோன்றித்தோன்றி மறைய

களிறு மாய்க்கும் கதிர் கழனி – மது 247

யானையை மறைக்கும் அளவுள்ள கதிர்களைக் கொண்ட வயல்களிலும்,

கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலை – நற் 321/5

மலையில் ஞாயிறு சேரும் கதிர்கள் மழுங்கிய மாலையில்

விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா – மலை 220

விழுந்தவரைக் கொல்லும் ஆழமான பொய்கையின் அருகே

சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை – நற் 3/6

சுரத்தின்கண் தங்கியிருந்தபோது நமது உள்ளத்தின் திண்மை சிதையத் தோன்றிய மாலை

பகல் மாய் அந்தி படு_சுடர் அமையத்து – அகம் 48/23

பகற்பொழுது முடியும் அந்தியாகிய ஞாயிறு மறையும் பொழுதிலே

அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின் – அகம் 395/7

தீ கவர்ந்து உண்டமையால் மரங்களின் நிழல் ஒழிந்த நெறியில்

வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை – புறம் 242/5

வலிய வேலையுடைய சாத்தன் இறந்துபட்ட பின்பு

மாய்த்த போல மழுகு நுனை தோற்றி
பாத்தி அன்ன குடுமி கூர்ம் கல்
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர – அகம் 5/12-14

(சாணையால்) தேய்க்கப்பட்டது போல் மழுங்கிய நுனைகளை வெளியே காட்டி,
பாத்திகட்டியதைப் போல் இருக்கும் குடுமியை உடைய கூர்மையான கற்கள்
விரல்களின் நுனியைச் சிதைக்கும் நிரைத்த நிலையிலுள்ள வழிகள் உடைய

கடுங்கண் மறவர் பகழி மாய்த்து என
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல் – அகம் 297/6,7

வன்கண்மையுடைய மறவர் தம் அம்புகளைத் தீட்டியதாக
பக்கம் மெலிந்த அச்சம் மிக்க நடுகல்லில்

பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன் – நற் 103/6,7

பசி வருத்துவதால் சுருண்டுகிடக்கும் பசிய கண்ணையுடைய செந்நாயின்,
குறிதப்பாத/கெடாத வேட்டையை மேற்கொண்டு சென்ற, கணவனான ஆண்நாய்

பெரு நிலம் கிளரினும் திரு நல உருவின்
மாயா இயற்கை பாவையின் – நற் 201/10,11

பெரிய இந்த நிலம் நடுங்கி மேலே எழுந்தாலும், தன் அழகிய நல்ல வடிவம்
கெடாத தன்மையுள்ள கொல்லிப்பாவை போல

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *