Skip to content

சொல் பொருள்

(பெ) பதிலுக்குப்பதில்

சொல் பொருள் விளக்கம்

பதிலுக்குப்பதில்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

tit for tat – An equivalent given in return

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குரல் கேட்ட கோழி குன்று அதிர கூவ
மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப – பரி 8/19,20

அந்தக் காரின் இடிக் குரலைக் கேட்ட கோழி குன்றே அதிரும்படி கூவும்;
அதைக் கேட்ட மதம் நிறைந்த யானையும் பதிலுக்குப்பதில் அதிர முழங்கும்

மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின்
குன்றம் குமுறிய உரை – பரி 8/34,35

மணவிழா முரசுகள் முழங்க முழங்க, அம் முழக்கத்திற்குப் பதிலுக்குப்பதில் முழங்கும் உன்
திருப்பரங்குன்றம் முழங்கிய முழக்கம்;

சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப
அல்லாந்தான் போல பெயர்ந்தான் – கலி 111/20,21

அவன் சொல்லிய சொற்களுக்கெல்லாம், பதிலுக்குப்பதில் நான் சொல்ல,
மனம் கலங்கியவன் போல அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *