Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கண்டம், தொண்டை, குரல்வளை, 2. கழுத்து,

சொல் பொருள் விளக்கம்

கண்டம், தொண்டை, குரல்வளை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

throat, larynx, trachea

neck

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கரும் தார் மிடற்ற செம் பூழ் சேவல் – அகம் 63/7

கரிய மாலை போன்ற கழுத்தினையுடைய சிவந்த குறும்பூழின் சேவல்

அரி குரல் மிடற்ற அம் நுண் பல் பொறி
காமரு தகைய கான வாரணம் – நற் 21/7,8

அரித்தெழும் குரலையுடைய தொண்டையினைக் கொண்ட அழகிய நுண்ணிய பலவான பொறிகளைக் கொண்ட
காண்போர் விரும்பும் தன்மையவான காட்டுக்கோழியின் சேவல்

படு மணி மிடற்ற பய நிரை ஆயம் – அகம் 54/9

ஒலிக்கும் மணிகள் கழுத்தில் கட்டப்பட்ட பால்பசுக்களாகிய கூட்டம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *