சொல் பொருள்
மீளா உறக்கம் – இறப்பு
சொல் பொருள் விளக்கம்
உறக்கம் விழிப்பு என்பவை மாறிமாறி நிகழ்பவை. ஆதலால் உறக்கம் மீளவும், விழிப்பு மீளவும் வருதலால் அவை மீளுறக்கம், மீள் விழிப்பு எனப்படும். எனினும் அவற்றை ‘மீள்’ என்னும் அடையின்றி வழங்குதல் அளவே அமைந்தது. ஆனால், இறப்பு பின்னே விழிப்பாக அமையாமல் மீளா உறக்கமாகவே அமைந்து விடுவதால் இறப்புப் பொருள் கொண்டது. போர்க்களம் சென்று மீளல் மீட்சியாம். களத்தில் மடிந்தவர்க்கு மீட்சி இல்லையே, ஆதலால் மீளா உறக்கம், மீளாச் செலவு, ‘திரும்பாப்பயணம்’ என்பவை இறப்புப் பொருளில் உண்டாயின.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்