சொல் பொருள்
(பெ) (மரத்தின்) அடிப்பகுதி
சொல் பொருள் விளக்கம்
அடிப்பகுதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stem (as of a tree)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆர முழுமுதல் உருட்டி – திரு 297 வாழை முழுமுதல் துமிய – திரு 307 தடவு நிலை பலவின் முழுமுதல் கொண்ட – பெரும் 77 முழுமுதல் கமுகின் மணி உறழ் எருத்தின் – நெடு 23 முழுமுதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்து என – குறி 188 புன்னை, நல் அரை முழுமுதல் அ வயின் தொடுத்த – நற் 354/5,6 செயலை முழுமுதல் ஒழிய – குறு 214/5 யாஅத்து, பொரி அரை முழுமுதல் உருவ குத்தி – குறு 255/1,2 அணங்கு உடை கடம்பின் முழுமுதல் தடிந்து – பதி 88/6 போந்தை முழுமுதல் நிலைஇய – அகம் 238/16 முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்து – புறம் 58/2 குழுமு நிலை போரின் முழுமுதல் தொலைச்சி – பெரும் 237 (பலவாகத்)திரண்ட தன்மையையுடைய (நெற்)போர்களின் பெரிய அடியைப் பிரித்து விரித்து காலை வந்த முழுமுதல் காந்தள் – குறு 361/4 காலையில் வந்த முழுச்செடியான காந்தளை முள் அரை தாமரை முழுமுதல் சாய்த்து – கலி 79/2 முள்ளைத் தண்டிலே கொண்டிருக்கும் தாமரை மலரை அடியோடு சாய்த்து இழுமென இழிதரும் பறை குரல் அருவி முழுமுதல் மிசைய கோடு-தொறும் துவன்றும் – பதி 70/24,25 இழும் என்ற ஒலியுடன் விழுகின்ற பறை முழக்கத்தைக் கொண்ட அருவியோசை அடிப்பக்கம் மிக அகண்ட உச்சியையுடைய மலைச் சிகரமெங்கும் நிறைந்து விளங்கும் நானிலம் துளக்கு அற முழுமுதல் நாற்றிய பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி – பரி 13/35-37 இம் மண்ணுலகத்து மக்களின் நடுக்கம் தீர, பெரிய அடிப்பகுதிவரை சென்று நாட்டிய பொன்னாலான மலரால் அழகிய மணிகளையுடைய மடலையுடைய பெரிய குமிழ் போன்ற பூணினைக் கொண்ட பிரகாசமாய் ஒளிவிடும் கொம்புகளையுடைய ஆண்பன்றியும் ஆகி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்