Skip to content

சொல் பொருள்

முடிவடை, மூடு, மூழ்கடி, மொய்

சொல் பொருள் விளக்கம்

முடிவடை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

come to an end, close, fold up, engulf, submerge, swarm around, throng about

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று – நற் 320/1

ஊரில் திருவிழாவும் முடிவடைந்தது; முழவுகளும் கட்டித்தொங்கவிடப்பட்டன
ச.வே.சு.உரை

ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே – புறம் 336/5

விளங்குகின்ற வேலேந்திய வீரரும் வாய்மூடி ஒன்றும் உரையாடாராயினர்

நெடு நீர துறை கலங்க
மூழ்த்து இறுத்த வியன் தானையொடு – பதி 33/4,5

ஆழமான நீரையுடைய குளங்களின் துறைகள் கலங்குமாறு
அதனை மூழ்கடிப்பதுபோல் தங்கிய பெரும் படையோடு

புக அரும் பொங்கு உளை புள் இயல் மாவும்
மிக வரினும் மீது இனிய வேழ பிணவும்
அகவு அரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா
சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி
வகை_வகை ஊழ்_ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி – பரி 10/14-18

ஏறி அமர்வதற்கு அரிய பொங்கிய பிடரிமயிரையுடைய பறவைபோல் விரைந்துசெல்லும் குதிரைகள்,
மிக விரைவாக வந்தாலும் மேலே அமர்ந்திருக்க இனிதாக இருக்கும் பெண்யானைகள்,
அதட்டி ஓட்டத் தேவையற்ற மாட்டுவண்டிகள், கோவேறு கழுதைகள், தெரிந்தெடுத்த குதிரைகள் பூட்டிய
வண்டிகள், தண்டு மரங்களோடு கூடிய பல்லக்குகள் ஆகியவற்றைத் தயார்செய்துகொண்டு
வகைவகையாகவும், முறைமுறையாகவும் விரைவாக மொய்த்துக்கொண்டு அவற்றின் மீது ஏறி,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *