Skip to content
யானை

யானை என்பது ஒரு விலங்கு

1. சொல் பொருள்

(பெ) கரிய நிறம் கொண்ட, பெரிய, பாலூட்டும் விலங்கு ஆகும்.

பார்க்க வேழம், வாரணம், புகர்முகம், கைம்மா, குஞ்சரம், உவா, பொங்கடி, உம்பல்

2. சொல் பொருள் விளக்கம்

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Elephant

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

தாழ் பெரும் தட கை உயர்த்த யானை/எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும் – திரு 158,159
அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப – சிறு 200
யானை தாக்கினும் அரவு மேல் செலினும் – பெரும் 134
குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும் – பெரும் 352
நெடும் கை யானை நெய் மிதி கவளம் – பெரும் 394
பெரும் கை யானை கொடும் தொடி படுக்கும் – பெரும் 436
தேம் படு கவுள சிறு கண் யானை/ஓங்கு நிலை கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த – முல் 31,32
வினை நவின்ற பேர் யானை/சினம் சிறந்து களன் உழக்கவும் – மது 47,48
நிழத்த யானை மேய் புலம் படர – மது 303
அண்ணல் யானை அடு போர் வேந்தர் – மது 348
இடை புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை/பகை புலம் கவர்ந்த பாய் பரி புரவி – மது 688,689
பெரு நல் யானை போர்களத்து ஒழிய – மது 735 நிவந்த யானை கண நிரை கவர்ந்த – மது 744 ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை/நீள் திரள் தட கை நிலம் மிசை புரள – நெடு 169,170 நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை/முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப – குறி 35,36 அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் – குறி 171 பெரும் கை யானை பிடி புக்கு ஆங்கு – பட் 224 உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை/வடி மணி புரவியொடு வயவர் வீழ – பட் 231,232 பொருது தொலை யானை கோடு சீர் ஆக – மலை 154 அகல் மலை இறும்பில் துவன்றிய யானை/பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல் – மலை 205,206 தாரொடு பொலிந்த வினை நவில் யானை/சூழியின் பொலிந்த சுடர் பூ இலஞ்சி – மலை 227,228 குரூஉ புலி பொருத புண் கூர் யானை/முத்து உடை மருப்பின் முழு வலி மிகு திரள் – மலை 517,518 வானத்து அன்ன வளம் மலி யானை/தாது எரு ததைந்த முற்றம் முன்னி – மலை 530,531 வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை/தண் நறும் சிலம்பில் துஞ்சும் – நற் 7/7,8 வெண் கோட்டு யானை போஒர் கிழவோன் – நற் 10/7 கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானை/தடாஅ நிலை ஒரு கோட்டு அன்ன – நற் 18/8,9 பைம் கண் யானை பரூஉ தாள் உதைத்த – நற் 41/1 பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின் – நற் 43/9 கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்ன – நற் 62/2 புலியொடு பொருத புண் கூர் யானை/நல் கோடு நயந்த அன்பு இல் கானவர் – நற் 65/5,6 பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு – நற் 89/8 கடு நடை யானை கன்றொடு வருந்த – நற் 105/4 துணையின் தீர்ந்த கடுங்கண் யானை/அணைய கண்ட அம் குடி குறவர் – நற் 108/2,3 ஏந்து கோட்டு யானை இசை வெம் கிள்ளி – நற் 141/9 செம் மறு கொண்ட வெண் கோட்டு யானை/கல் மிசை அருவியின் கழூஉம் சாரல் – நற் 151/3,4 நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை/வேனில் குன்றத்து வெம் வரை கவாஅன் – நற் 171/1,2 நிரைத்த யானை முகத்து வரி கடுப்ப – நற் 176/5 பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் – நற் 186/3 பொருத யானை வெண் கோடு கடுப்ப – நற் 225/2 படு மணி யானை பசும் பூண் சோழர் – நற் 227/5 சிறு கண் யானை பெரும் கை ஈர் இனம் – நற் 232/1 புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல – நற் 237/8 யானை இன நிரை வௌவும் – நற் 240/9 கொன்ற யானை செம் கோடு கழாஅ – நற் 247/2 வண்ணம் மிகுந்த அண்ணல் யானை/நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என் – நற் 273/6,7 பொருத யானை புல் தாள் ஏய்ப்ப – நற் 279/6 பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்த – நற் 287/2 கொன்ற யானை கோடு கண்டு அன்ன – நற் 294/6 வினை வல் யானை புகர் முகத்து அணிந்த – நற் 296/2 உரு கெழு யானை உடை கோடு அன்ன – நற் 299/1 ஒடித்து மிசை கொண்ட ஓங்கு மருப்பு யானை/பொறி படு தட கை சுருக்கி பிறிது ஓர் – நற் 318/5,6 கோடு முற்று யானை காடு உடன் நிறைதர – நற் 324/4 கல்லா யானை கடும் தேர் செழியன் – நற் 340/2 இரும் புலி தொலைத்த பெரும் கை யானை/வெம் சின உருமின் உரறும் – நற் 353/9,10 முறம் செவி யானை தட கையின் தடைஇ – நற் 376/1 கடும் பகட்டு யானை நெடுமான்அஞ்சி – நற் 381/7
வரை போல் யானை வாய்மொழி முடியன் – நற் 390/9
கடும் பகட்டு யானை நெடும் தேர் குட்டுவன் – நற் 395/4
செம் கோல் அம்பின் செம் கோட்டு யானை/கழல் தொடி சேஎய் குன்றம் – குறு 1/2,3
மாசு அற கழீஇய யானை போல – குறு 13/1
கான யானை கை விடு பசும் கழை – குறு 54/3
வெண் கோட்டு யானை சோனை படியும் – குறு 75/3
கான யானை தோல் நயந்து உண்ட – குறு 79/1
கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சி – குறு 91/6
கான யானை அணங்கி ஆஅங்கு – குறு 119/2
கடுத்தலும் தணிதலும் இன்றே யானை/குளகு மென்று ஆள் மதம் போல – குறு 136/3,4
சுரம் செல் யானை கல் உறு கோட்டின் – குறு 169/1
கயம் நாடு யானை கவளம் மாந்தும் – குறு 170/3
பேதை யானை சுவைத்த – குறு 179/6
வறும் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை/குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇ – குறு 215/4,5
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய – குறு 232/4
வீயா மென் சினை வீ உக யானை/ஆர் துயில் இயம்பும் நாடன் – குறு 247/5,6
தட மருப்பு யானை கண்டனர் தோழி – குறு 255/5
ஏந்து கோட்டு யானை சேந்தன் தந்தை – குறு 258/4
மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை/வண் தேர் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து – குறு 260/5,6
பொருத யானை புகர் முகம் கடுப்ப – குறு 284/1
கடுங்கண் யானை கானம் நீந்தி – குறு 331/4
மட பிடி தழீஇ தட கை யானை/குன்றக சிறுகுடி இழிதரும் – குறு 332/4,5
புனம் உண்டு கடிந்த பைம் கண் யானை/நறும் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு – குறு 333/2,3
அண்ணல் யானை அணி முகம் பாய்ந்து என – குறு 343/2
புலம் தேர் யானை கோட்டு இடை ஒழிந்த – குறு 348/2
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை/மீன் படு சுடர் ஒளி வெரூஉம் – குறு 357/6,7
யானை கை மடித்து உயவும் – குறு 388/6
ஆன் நீர் பத்தல் யானை வௌவும் – ஐங் 304/2
சிறு கண் யானை ஆள் வீழ்த்து திரிதரும் – ஐங் 314/3
சிறு கண் யானை நிலம் தொடல் செல்லா – ஐங் 327/2
பெரும் கை யானை இரும் சினம் உறைக்கும் – ஐங் 352/3
சிறு கண் யானை திரிதரும் – ஐங் 355/4
யானை பிணித்த பொன் புனை கயிற்றின் – ஐங் 356/2
சிறு கண் யானை உறு பகை நினையாது – ஐங் 362/2
நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை/இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் – ஐங் 377/1,2
கல்லா யானை வேந்து பகை வெலற்கே – ஐங் 429/4
வை நுதி மழுகிய தடம் கோட்டு யானை/வென் வேல் வேந்தன் பகை தணிந்து – ஐங் 444/3,4
அண்ணல் யானை அரசு விடுத்து இனியே – ஐங் 466/2
வெம் முரண் யானை விறல் போர் வேந்தே – ஐங் 467/5
ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டு என – ஐங் 498/3
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை/பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்த நின் – பதி 11/18,19
போர் வல் யானை சேரலாத – பதி 15/23
கடாஅ யானை கண நிரை அலற – பதி 20/12
மாரி அம் கள்ளின் போர் வல் யானை/போர்ப்பு-உறு முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்து – பதி 21/17,18
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை/இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா – பதி 25/2,3
பைம் கண் யானை புணர் நிரை துமிய – பதி 28/2
பெரும் பல் யானை குட்டுவன் – பதி 29/14
பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும் – பதி 34/7
இரும் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு – பதி 35/3
யானை பட்ட வாள் மயங்கு கடும் தார் – பதி 36/6
தோட்டி தந்த தொடி மருப்பு யானை/செ உளை கலிமா ஈகை வான் கழல் – பதி 38/6,7 தொழில் புகல் யானை நல்குவன் பலவே – பதி 40/31 அண்ணல் யானை அடு போர் குட்டுவ – பதி 42/8 பல் செரு கடந்த கொல் களிற்று யானை/கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு – பதி 46/10,11 தாங்குநர் தட கை யானை தொடி கோடு துமிக்கும் – பதி 51/29 ஒல்லார் யானை காணின் – பதி 54/16 வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு – பதி 68/9 மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடி – பதி 69/1 பொலம் தார் யானை இயல் தேர் பொறைய – பதி 75/3 யானை காண்பல் அவன் தானையானே – பதி 77/12 கொல் களிற்று யானை எருத்தம் புல்லென – பதி 79/10 வான் மருப்பின் களிற்று யானை/மா மலையின் கணம்கொண்டு அவர் – பதி 80/1,2
செல் சமம் தொலைத்த வினை நவில் யானை/கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி – பதி 82/4,5
நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை/பார்வல் பாசறை தரூஉம் பல் வேல் – பதி 84/4,5
பெரு நல் யானை இறை கிழவோயே – பதி 90/57
கடாஅ யானை முழங்கும் – பதி 94/9
நின் ஒன்று உயர் கொடி யானை/நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று – பரி 4/40,41
முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட – பரி 8/17
படு மணி யானை நெடியாய் நீ மேய – பரி 19/28
நின யானை சென்னி நிறம் குங்குமத்தால் – பரி 19/85
பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானை/குருதி கோட்டு அழி கறை தெளி பெற கழீஇயின்று – பரி 20/4,5
மெய் அணி யானை மிசையராய் ஒய்யென – பரி 24/14
மணி அணி யானை மிசை மைந்தரும் மடவாரும் – பரி 24/69
குரு மணி யானை இயல் தேர் பொருநன் – பரி 24/71
வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன் – பரி 24/91
உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை/கடும் தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு – கலி 12/4,5
உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை/ஊறு நீர் அடங்கலின் உண் கயம் காணாது – கலி 13/6,7
இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் – கலி 24/10
கறுவு கொண்டு அதன் முதல் குத்திய மத யானை/நீடு இரு விடர் அகம் சிலம்ப கூய் தன் – கலி 38/7,8
பிடியொடு மேயும் புன்செய் யானை/அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் – கலி 41/7,8
கொல் யானை கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம் – கலி 42/7
பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளா – கலி 42/17
வயங்கு எழில் யானை பய மலை நாடனை – கலி 43/22
பூ பொறி யானை புகர் முகம் குறுகியும் – கலி 46/6
நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை/நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின் – கலி 49/2,3
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை/மல்லரை மறம் சாய்த்த மால் போல் தன் கிளை நாப்பண் – கலி 52/4,5
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டு ஆங்கு – கலி 56/32
ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின் – கலி 57/10
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும் – கலி 57/18
ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம் – கலி 66/3
போர் யானை வந்தீக ஈங்கு – கலி 86/10
புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன் – கலி 97/7
அ யானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன் – கலி 97/9
அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு – கலி 97/10
விடாஅது நீ எம் இல் வந்தாய் அ யானை/கடாஅம் படும் இடத்து ஓம்பு – கலி 97/30,31
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல் – கலி 134/3
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண் – அகம் 1/4
குழியில் கொண்ட மராஅ யானை/மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது – அகம் 13/7,8
சூழி யானை சுடர் பூண் நன்னன் – அகம் 15/10
மராஅ யானை மதம் தப ஒற்றி – அகம் 18/4
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி – அகம் 24/13
பெரும் கதவு பொருத யானை மருப்பின் – அகம் 26/6
வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை/மற போர் பாண்டியர் அறத்தின் காக்கும் – அகம் 27/7,8
கொம்மை வாடிய இயவுள் யானை/நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி – அகம் 29/16,17
போர் வல் யானை பொலம் பூண் எழினி – அகம் 36/16
பெரும் கை யானை நிவப்பின் தூங்கும் – அகம் 57/8
அண்ணல் யானை வெண் கோடு கொண்டு – அகம் 61/9
கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி – அகம் 63/4
உயவல் யானை வெரிநு சென்று அன்ன – அகம் 65/14
வெண் கோட்டு யானை விளி பட துழவும் – அகம் 68/19
ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய – அகம் 78/21
செரு செய் யானை செல் நெறி வினாஅய் – அகம் 82/12
கன்று பசி களைஇய பைம் கண் யானை/முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும் – அகம் 85/7,8
இரும் புலி தொலைத்த பெரும் கை யானை/கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் – அகம் 88/9,10
பாசி தின்ற பைம் கண் யானை/ஓய் பசி பிடியொடு ஒரு திறன் ஒடுங்க – அகம் 91/5,6
கடும் பகட்டு யானை நெடும் தேர் கோதை – அகம் 93/20
அண்ணல் யானை அடு போர் சோழர் – அகம் 96/13
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த – அகம் 100/9
வரை முதல் சிதறிய வை போல் யானை/புகர் முகம் பொருத புது நீர் ஆலி – அகம் 108/3,4
யானை கொண்ட துகில் கொடி போல – அகம் 111/4
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை/சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி – அகம் 115/13,14
மை அணி யானை மற போர் செழியன் – அகம் 116/13
பெரும் கை யானை கோள் பிழைத்து இரீஇய – அகம் 118/8
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை/கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனை – அகம் 119/18,19
கான யானை கவின் அழி குன்றம் – அகம் 123/4
கடாஅம் மாறிய யானை போல – அகம் 125/8
கான நாடன் வரூஉம் யானை/கயிற்று புறத்து அன்ன கல் மிசை சிறு நெறி – அகம் 128/10,11
தேன் உடை குவி குலை துஞ்சி யானை/இரும் கவுள் கடாஅம் கனவும் – அகம் 132/12,13
கறை அடி யானை நன்னன் பாழி – அகம் 142/9
கடாஅ யானை கொட்கும் பாசறை – அகம் 144/13
வாள் வரி பொருத புண் கூர் யானை/புகர் சிதை முகத்த குருதி வார – அகம் 145/7,8
வண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானை/தண் கமழ் சிலம்பின் மரம் பட தொலைச்சி – அகம் 148/3,4
நெடு நல் யானை அடு போர் செழியன் – அகம் 149/13
மாஅல் யானை ஆஅய் கானத்து – அகம் 152/21
கான யானை கவளம் கொள்ளும் – அகம் 157/8
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானை/தொடி உடை தட மருப்பு ஒடிய நூறி – அகம் 159/16,17
கந்து கால் ஒசிக்கும் யானை/வெம் சின வேந்தன் வினை விட பெறினே – அகம் 164/13,14
முருங்கை மேய்ந்த பெரும் கை யானை/வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி – அகம் 167/11,12
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி – அகம் 172/8
மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த – அகம் 177/15
சிறு கண் யானை நெடும் கை நீட்டி – அகம் 179/4
பனை வெளிறு அருந்து பைம் கண் யானை/ஒண் சுடர் முதிரா இளம் கதிர் அமையத்து – அகம் 187/18,19
உயங்கல் யானை நீர் நசைக்கு அலமர – அகம் 199/4
வினை நவில் யானை விறல் போர் பாண்டியன் – அகம் 201/3
புலி பகை வென்ற புண் கூர் யானை/கல்அக சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின் – அகம் 202/3,4 கடாஅ யானை கவுள் மருங்கு உறழ – அகம் 205/17 அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் – அகம் 208/4 இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு – அகம் 208/7 மாஅல் யானை மற போர் புல்லி – அகம் 209/8 வினை நவில் யானை விறல் போர் தொண்டையர் – அகம் 213/1 கடாஅ யானை குழூஉ சமம் ததைய – அகம் 220/4 மாஅல் யானை புலி செத்து வெரீஇ – அகம் 232/3 ஊன் இல் யானை உயங்கும் வேனில் – அகம் 233/5 கான யானை வெண் கோடு சுட்டி – அகம் 245/11 கொலை வல் யானை சுரம் கடி கொள்ளும் – அகம் 247/9 மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை/வாயுள் தப்பிய அரும் கேழ் வய புலி – அகம் 251/15,16 உயர் நுதல் யானை புகர் முகத்து ஒற்றி – அகம் 252/3 காய் சின யானை கங்குல் சூழ – அகம் 264/13 செம் நுதல் யானை வேங்கடம் தழீஇ – அகம் 265/21 பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு – அகம் 282/3 வெண் கோட்டு யானை விறல் போர் குட்டுவன் – அகம் 290/12 இரவின் மேயல் மரூஉம் யானை/கால் வல் இயக்கம் ஒற்றி நடுநாள் – அகம் 292/8,9 ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பி – அகம் 295/6 கடும் பகட்டு யானை நெடும் தேர் செழியன் – அகம் 296/11 பள்ளி யானை பரூஉ புறம் தைவரும் – அகம் 302/3 ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை – அகம் 304/17 அடு முரண் தொலைத்த நெடு நல் யானை/மையல் அம் கடாஅம் செருக்கி மதம் சிறந்து – அகம் 307/7,8 பசித்த யானை பழங்கண் அன்ன – அகம் 321/1 யானை செல் இனம் கடுப்ப வானத்து – அகம் 323/9 ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் – அகம் 325/19 இழை அணி யானை சோழர் மறவன் – அகம் 326/9 நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட – அகம் 329/11 கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை/நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய – அகம் 332/2,3 யானை பெரு நிரை வானம் பயிரும் – அகம் 333/12 யானும் அறிவென்-மன்னே யானை தன் – அகம் 335/4 கொல் களிற்று யானை நல்கல் மாறே – அகம் 336/14 இழை அணி யானை பழையன்மாறன் – அகம் 346/19 வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇ – அகம் 347/12 யானை வவ்வின தினை என நோனாது – அகம் 348/11 மத வலி யானை மறலிய பாசறை – அகம் 354/1 கடும் பகட்டு யானை சோழர் மருகன் – அகம் 356/12 தட மருப்பு யானை வலம் பட தொலைச்சி – அகம் 357/4 ஓடை யானை உயர் மிசை எடுத்த – அகம் 358/13 வீழ் பிடி கெடுத்த நெடும் தாள் யானை/சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும் – அகம் 359/10,11 வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து – அகம் 362/3 கான யானை கதுவாய் வள் உகிர் – அகம் 365/5 பணை தாள் யானை பரூஉ புறம் உரிஞ்ச – அகம் 373/3 அண்ணல் யானை அடு போர் வேந்தர் – அகம் 373/16 கொன்ற யானை கோட்டின் தோன்றும் – அகம் 375/15 கல்லா யானை கடி புனல் கற்று என – அகம் 376/2 கைவல் யானை கடும் தேர் சோழர் – அகம் 385/3 ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் – அகம் 387/18 வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன் – அகம் 391/11 வீழ் பிடி கெடுத்த வெண் கோட்டு யானை/உண் குளகு மறுத்த உயக்கத்து அன்ன – அகம் 392/2,3 தினை மேய் யானை இனன் இரிந்து ஓட – அகம் 392/13 உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை/வாங்கு அமை கழையின் நரலும் அவர் – அகம் 398/23,24 பெரும் கை யானை இரும் பிடர் தலை இருந்து – புறம் 3/11 சிறு கண் யானை செவ்விதின் ஏவி – புறம் 6/13 தேன் இறைகொள்ளும் இரும் பல் யானை/உடலுநர் உட்க வீங்கி கடல் என – புறம் 17/35,36 அம்பு சென்று இறுத்த அரும் புண் யானை/தூம்பு உடை தட கை வாயொடு துமிந்து – புறம் 19/9,10 பொன் அணி யானை தொன் முதிர் வேளிர் – புறம் 24/21 வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின் – புறம் 37/12 யானை வால் மருப்பு எறிந்த வெண் கடை – புறம் 39/2 அலமரல் யானை உரும் என முழங்கவும் – புறம் 44/5 களம் கொள் யானை கடு மான் பொறைய – புறம் 53/5 களி இயல் யானை கரிகால்வளவ – புறம் 66/3 நறும் சேறு ஆடிய வறும் தலை யானை/நெடு நகர் வரைப்பின் படு முழா ஓர்க்கும் – புறம் 68/16,17 கழை தின் யானை கால் அகப்பட்ட – புறம் 73/9 பசித்து பணை முயலும் யானை போல – புறம் 80/7 அண்ணல் யானை அடுகளத்து ஒழிய – புறம் 93/13
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி – புறம் 101/4
நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன் – புறம் 101/6
அண்ணல் யானை வேந்தர்க்கு – புறம் 115/5
ஒன்னார் யானை ஓடை பொன் கொண்டு – புறம் 126/1
அண்ணல் யானை எண்ணின் கொங்கர் – புறம் 130/5
கறை அடி யானை இரியல்போக்கும் – புறம் 135/12 இரங்கு முரசின் இனம் சால் யானை/முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை – புறம் 137/1,2 கடாஅ யானை கலிமான் பேகன் – புறம் 141/12
கடாஅ யானை கழல் கால் பேகன் – புறம் 142/4
கடாஅ யானை கலிமான் பேக – புறம் 145/3 இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும் – புறம் 153/2 யானை இனத்தொடு பெற்றனர் நீங்கி – புறம் 153/9 நெடு நல் யானை எம் பரிசில் – புறம் 162/6 ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகா – புறம் 165/7 சிறு கண் யானை வெண் கோடு பயந்த – புறம் 170/10 பாடி பெற்ற பொன் அணி யானை/தமர் எனின் யாவரும் புகுப அமர் எனின் – புறம் 177/3,4 யானை புக்க புலம் போல – புறம் 184/10 களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை/விளங்கு மணி கொடும் பூண் விச்சிக்கோவே – புறம் 200/7,8 படு மணி யானை பறம்பின் கோமான் – புறம் 201/4 தார் அணி யானை சேட்டு இரும் கோவே – புறம் 201/13 யானை வேட்டுவன் யானையும் பெறுமே – புறம் 214/4 கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் – புறம் 228/10 மைந்து உடை யானை கை வைத்து உறங்கவும் – புறம் 229/18 பா அடி யானை பரிசிலர்க்கு அருகா – புறம் 233/2 யானை தந்த முளி மர விறகின் – புறம் 247/1 கான யானை தந்த விறகின் – புறம் 251/5 மையல் யானை அயா உயிர்த்து அன்ன – புறம் 261/7 கடும் பகட்டு யானை வேந்தர் – புறம் 265/8 இரங்கு முரசின் இனம் சால் யானை/நிலம் தவ உருட்டிய நேமியோரும் – புறம் 270/2,3 யானை எறிந்து களத்து ஒழிந்தனனே – புறம் 279/4 பொலம் புனை ஓடை அண்ணல் யானை/இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும் – புறம் 287/5,6 இன களிற்று யானை இயல் தேர் குருசில் – புறம் 290/2 நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் – புறம் 293/1 இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே – புறம் 303/9 வெம் சின யானை வேந்தனும் இ களத்து – புறம் 307/11 வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே – புறம் 308/5 சிறு கண் யானை வேந்து விழுமுறவே – புறம் 316/12 அண்ணல் யானை அணிந்த – புறம் 326/14 வம்பு அணி யானை வேந்து தலைவரினும் – புறம் 333/17 உயர் மருப்பு யானை புகர் முகத்து அணிந்த – புறம் 334/8 கடுங்கண் யானை காப்பனர் அன்றி – புறம் 337/15 முறம் செவி யானை வேந்தர் – புறம் 339/12 இரும் பனை அன்ன பெரும் கை யானை/கரந்தை அம் செறுவின் பெயர்க்கும் – புறம் 340/7,8 வினை நவில் யானை பிணிப்ப – புறம் 347/10 செம் நுதல் யானை பிணிப்ப – புறம் 348/9 கடாஅ யானை கால்வழி அன்ன என் – புறம் 368/14
கரும் கை யானை கொண்மூ ஆக – புறம் 369/2
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி – புறம் 371/15
பிணர் மருப்பு யானை செரு மிகு நோன் தாள் – புறம் 387/29
அண்ணல் யானை வழுதி – புறம் 388/15
அண்ணல் யானை வேந்தர் – புறம் 390/27
சிறு கண் யானை பெறல் அரும் தித்தன் – புறம் 395/18
அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசை – நற் 194/5
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும் – குறு 77/4
நெடு நல் யானைக்கு கந்து ஆற்றாவே – புறம் 57/11
வேந்து ஊர் யானைக்கு அல்லது – புறம் 301/15
கறை அடி யானைக்கு அல்லது – புறம் 323/5
இழை அணி கொடி திண் தேர் இன மணி யானையாய்/அறன் நிழல் என கொண்டாய் ஆய் குடை அ குடை – கலி 99/7,8
மாரி யானையின் மருங்குல் தீண்டி – நற் 141/2
பள்ளி யானையின் வெய்ய உயிரினை – நற் 253/2
புது கோள் யானையின் பிணித்து அற்றால் எம்மே – குறு 129/6
பள்ளி யானையின் உயிர்த்து என் – குறு 142/4
மாரி யானையின் வந்து நின்றனனே – குறு 161/7
துகள் சூழ் யானையின் பொலிய தோன்றும் – குறு 279/6
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ – குறு 359/4
மதில் கொல் யானையின் கதழ்பு நெறி வந்த – ஐங் 78/2
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன் – கலி 54/14
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு – அகம் 6/9
அழல் பொழி யானையின் ஐயென தோன்றும் – அகம் 223/7
இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று – புறம் 129/6
தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப – புறம் 275/7

கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும்/அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து – மது 383,384
கான மான் அதர் யானையும் வழங்கும் – அகம் 318/1
யானையும் மலையின் தோன்றும் பெரும நின் – புறம் 42/2
எனை பல் யானையும் அம்பொடு துளங்கி – புறம் 63/1
நெடு நல் யானையும் தேரும் மாவும் – புறம் 72/4
யானை வேட்டுவன் யானையும் பெறுமே – புறம் 214/4
ஆள் இல் வரை போல் யானையும் மருப்பு இழந்தனவே – புறம் 238/9
மாண் வினை யானையும் மணி களைந்தனவே – புறம் 305/6
படு மணி மருங்கின பணை தாள் யானையும்/கொடி நுடங்கு மிசைய தேரும் மாவும் – புறம் 351/1,2

சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி – சிறு 142
பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும் – பட் 251
பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் – நற் 333/4
புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம் – ஐங் 386/1
பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து – பதி 32/11
பெரும் களிற்று யானையொடு அரும் கலம் தராஅர் – பதி 71/21
இரும் கண் யானையொடு அரும் கலம் தெறுத்து – பதி 91/1
மாஅல் யானையொடு மறவர் மயங்கி – கலி 5/2
பூ நுதல் யானையொடு புலி பொர குழைந்த – அகம் 268/2
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய – புறம் 126/20
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு பணை முனிந்து – புறம் 178/1

பூ நுதல் யானையோடு புனை தேர் பண்ணவும் – புறம் 12/2
ஆ பரந்து அன்ன யானையோன் குன்றே – பதி 78/14

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *