வஞ்சி என்பது ஒரு வகை மரம், கொடி
1. சொல் பொருள்
(பெ) 1. ஒரு மரம்/பூ, நீர்வஞ்சி 2. ஆற்றுப்பாலை, ஆற்றிலுப்பை? 3. வஞ்சித்திணை என்ற ஒரு புறத்திணை, படலம் 4. சேர மன்னரின் தலைநகர், இது இன்றைய கரூர் என்பர், 5. வஞ்சிக்கொடி, சீந்தில் கொடி 6. வஞ்சிக்கொடி போன்ற பெண்
2. சொல் பொருள் விளக்கம்
இதை மலையாள மொழியில் தற்போதும் வஞ்சி (വഞ്ചി) என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
வஞ்சித்திணை 21 துறைகள் கொண்டது
- வஞ்சி
- வஞ்சியரவம்
- குடைநிலை
- வாணிலை
- கொற்றவை நிலை
- கொற்றவஞ்சி
- கொற்ற வள்ளை
- பேராண்வஞ்சி
- மாராயவஞ்சி
- நெடுமொழிவஞ்சி
- முதுமொழிவஞ்சி
- உழபுலவஞ்சி
- மழபுலவஞ்சி
- கொடைவஞ்சி
- குறுவஞ்சி
- ஒருதனிநிலை
- தழிஞ்சி
- பாசறை
- பெருவஞ்சி
- பெறுஞ்சோற்று நிலை
- நல்லிசை வஞ்சி
மொழிபெயர்ப்புகள்
four-seeded willow, Indian willow • Assamese: ভেহ bhe • Bengali: বৈশাখী boishakhi, পানী জমা pani joma • Garo: bhesh, bol-slak • Hindi: बेद लैला bed-laila • Kannada: ಬೈಚೆ ಮರ baiche mara, ನೀರುವಂಜಿ neeruvanji • Kashmiri: वीर् vir • Khasi: jamynrei • Konkani: वाळुंज walunj • Malayalam: വഞ്ചി vanji • Manipuri: ঊযুম ooyum • Marathi: वाळुंज valunj OR walunj • Sanskrit: जलवेतस jalavetasa • Santal: gada • Tamil: ஆற்றுப்பாலை arru-p-palai, சுவேதம் cuvetam, நீர்வஞ்சி nir-vanci • Telugu: కొండగన్నేరు konda ganneru Hindi: बक्षेल bakshel, बेधा bedha, बेगस begas, बेंट bent, भैन्स bhains, जलमाला jalmala, मगशेर magsher • Marathi: बच्चा bachcha, बाका baka, बितसा bitsa, बोक bok • Sanskrit: नादेय nadeya, वानीर vanira, वञ्जुल vanjula, वरुणा varuna
3. ஆங்கிலம்
Salix tetrasperma, Calamus rotang?, Tinospora cordifolia?, Glabrous mahua of the Malabar coast, Bassia malabarica; Madhuca neriifolia, the capital city of chera kings, the present city of Karur, a theme in ‘puram’
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய - பொருள். செய்யு:22/1 வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா - பொருள். செய்யு:26/1 அ நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர் - பொருள். செய்யு:31/1 வஞ்சி அடியே இரு சீர்த்து ஆகும் - பொருள். செய்யு:45/1 தூங்கல் ஓசை வஞ்சி ஆகும் - பொருள். செய்யு:84/1 ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி என - பொருள். செய்யு:105/1 ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை - பொருள். செய்யு:108/1 தூங்கல்வண்ணம் வஞ்சி பயிலும் - பொருள். செய்யு:230/1 வஞ்சி-தானே முல்லையது புறனே - பொருள். புறத்:6/1 நேர் நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும் - பொருள். செய்யு:42/1 உறழ் நிலை இலவே வஞ்சிக்கு என்ப - பொருள். செய்யு:57/2 வஞ்சிச்சீர் என வகைபெற்றனவே - பொருள். செய்யு:20/1 கலி நிலை வகையும் வஞ்சியும் பெறாஅ - பொருள். செய்யு:110/4 வஞ்சி பித்திகம் சிந்துவாரம் - குறி 89 வஞ்சி ஓங்கிய யாணர் ஊர - ஐங் 50/2 வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும் - அகம் 216/4 நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய - அகம் 226/9 வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க - அகம் 263/12 வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே - அகம் 396/19 விண் பொரு புகழ் விறல் வஞ்சி/பாடல் சான்ற விறல் வேந்தனும்மே - புறம் 11/6,7 பாடுநர் வஞ்சி பாட படையோர் - புறம் 33/10 வாடா வஞ்சி வாட்டும் நின் - புறம் 39/17 வஞ்சி முற்றம் வய களன் ஆக - புறம் 373/24 எஞ்சா மரபின் வஞ்சி பாட - புறம் 378/9 வஞ்சி கோட்டு உறங்கும் நாரை - புறம் 384/2 புல் இலை வஞ்சி புற மதில் அலைக்கும் - புறம் 387/33 வாடா வஞ்சி பாடினேன் ஆக - புறம் 394/9 பாடினி பாடும் வஞ்சிக்கு/நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே - புறம் 15/24,25 வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று - சிறு 50 உள்ளிவிழவின் வஞ்சியும் சிறிதே - நற் 234/8 வாழிய வஞ்சியும் கோழியும் போல - பரி 30/10 பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ - புறம் 32/2
வஞ்சி பித்திகம் சிந்துவாரம் – குறி 89 வஞ்சிப்பூ, பிச்சிப்பூ, கருநொச்சிப்பூ, வஞ்சி ஓங்கிய யாணர் ஊர – ஐங் 50/2 வஞ்சி மரங்கள் ஓங்கி வளர்ந்த புதுவருவாய் உள்ள ஊரனே! நாண் கொள் கோலின் மீன் கொள் பாண்மகள் தான் புனல் அடைகரை படுத்த வராஅல் நார் அரி நறவு உண்டிருந்த தந்தைக்கு வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும் – அகம் 216/1-4 கயிற்றினைக் கொண்ட நுண்ணிய தூண்டிற்கோலால் மீனைப் பிடிக்கும் பாணரது மகள் புனலை அடுத்த கரையில் அகப்படுத்திய வரால் மீனை பன்னாடையால் அரிக்கப்பெற்ற கள்ளை உண்டு களித்திருந்த தன் தந்தைக்கு வஞ்சி மரத்தின் விறகினால் சுட்டு வாயில் உண்பிக்கும் நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய விடியல் வந்த பெரு நீர் காவிரி – அகம் 226/9,10 நீண்ட வெள்ளிய மருதமரத்துடன் வஞ்சி மரத்தையும் சாய்த்து நாட்காலையில் வந்த மிக்க வெள்ளத்தையுடைய காவிரியிடத்தே மென்பாலான் உடன் அணைஇ வஞ்சி கோட்டு உறங்கும் நாரை – புறம் 384/1,2 மென்புலமான மருதவயற்கண் தன் இனத்துடனே மேய்ந்துண்டு வஞ்சி மரத்தின் கிளையின்கண் தங்கி உறங்குதலைச் செய்யும் நாரை ஒளிறு வேல் கோதை ஓம்பி காக்கும் வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க – அகம் 263/11,12 ஒளிவீசும் வேலையுடைய சேரன் பாதுகாத்து ஆளும் வஞ்சி போன்ற எனது வளம் பொருந்திய மனைசிறப்புற்று விளங்க புல் இலை வஞ்சி புற மதில் அலைக்கும் கல்லென் பொருநை மணலினும் – புறம் 387/33,34 இலை இல்லாத வஞ்சியாகிய வஞ்சிமாநகரின் மதிற்புறத்தை அலைக்கும் கல்லென்னும் ஓசையையுடைய ஆன்பொருநையாற்று மணலினும் வீயா சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்ட வியன் களம் பலகொல் யா பல கொல்லோ பெரும வாருற்று விசி பிணி கொண்ட மண்கணை முழவின் பாடினி பாடும் வஞ்சிக்கு நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே – புறம் 15/20-25 கெடாத தலைமையுடைய யாகங்களை முடித்து தூண் நடப்பட்ட அகன்ற வேள்விச்சாலைகள் பலவோ இவற்றுள் யாவையோ பல பெருமானே, வார் பொருந்தி வலித்துக் கட்டுதலைப் பொருந்திய மார்ச்சனை செறிந்த தண்ணுமையையுடைய விறலி பாடும் வஞ்சித்திணைப் பாடலுக்கு ஏற்ப ஆராய்தல் அமைந்த வலிமையுடையோய் நினக்கு பாடினி பாடும் வஞ்சி என்றது படையெடுத்துச் சென்ற சிறப்பைப் பாடினி பாடினள் என்பதாம். வஞ்சித்திணை என்பது படையெடுத்துச் செல்லும் இயல்பு. வஞ்சி-தானே முல்லையது புறனே எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன் அஞ்சு தக தலை சென்று அடல் குறித்தன்றே – தொல்-பொருள்-புறத்-6,7 என்பது தொல்காப்பியம். மண்ணாசை கொண்ட ஒரு வேந்தனை, இன்னொரு வேந்தன், அவன் அஞ்சுமாறு படையெடுத்துசென்று அவனை அழித்தல். இவ்வாறு படையெடுத்துச் செல்லுதலை மேற்செலவு என்பர். இதனைப் பாடுவது வஞ்சிப் பாடல் ஆகும்.
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் - மது:17/128 மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் - மது:17/129 மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சி_கோன் - மது:21/11 வஞ்சி முற்றம் நீங்கி செல்வோன் - வஞ்சி:25/9 வளம் தலைமயங்கிய வஞ்சி முற்றத்து - வஞ்சி:25/34 பூவா வஞ்சி பொன் நகர் புறத்து என் - வஞ்சி:25/148 வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என - வஞ்சி:25/149 காவல் வஞ்சி கடைமுகம் பிரியா - வஞ்சி:25/174 கூடார் வஞ்சி கூட்டுண்டு சிறந்த - வஞ்சி:25/179 வாடா வஞ்சி மா நகர் புக்க பின் - வஞ்சி:25/180 புரை தீர் வஞ்சி போந்தையின் தொடுப்போன் - வஞ்சி:26/46 பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி வாய் வாள் நெடுந்தகை மணி முடிக்கு அணிந்து - வஞ்சி: 26/50,51 வானவன் போல வஞ்சி நீங்கி - வஞ்சி:26/79 வஞ்சி தோன்றிய வானவ கேளாய் - வஞ்சி:26/99 வாடா வஞ்சி வானவர் பெருந்தகை - வஞ்சி:27/113 எண்_நான்கு மதியம் வஞ்சி நீங்கியது - வஞ்சி:27/149 வஞ்சி பாடுதும் மடவீர் யாம் எனும் - வஞ்சி:27/249 வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர் - வஞ்சி:28/4 பேர் இசை வஞ்சி மூதூர் புறத்து - வஞ்சி:28/196 வஞ்சி மா நகர் புகுந்து - வஞ்சி:29/32 வஞ்சியர் வஞ்சி இடையீர் மற வேலான் - வஞ்சி:29/110 வஞ்சி மகளிர் குறுவரே வான் கோட்டால் - வஞ்சி:29/188 வஞ்சி மூதூர் மா நகர் மருங்கின் - வஞ்சி:30/127 வஞ்சி மூதூர் மணிமண்டபத்திடை - வஞ்சி:30/173 கிடந்த வஞ்சி காண்டம் முற்றிற்று - வஞ்சி:30/217 மறம் சேர் வஞ்சிமாலையொடு புனைந்து - வஞ்சி:26/56 வஞ்சியர் வஞ்சி இடையீர் மற வேலான் - வஞ்சி:29/110 பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி - வஞ்சி:26/50 கலி கெழு வஞ்சியும் ஒலி புனல் புகாரும் - புகார்:8/4 குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும் - வஞ்சி:25/141 குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும் நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும் - வஞ்சி: 25/141,142 நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும் வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும் - வஞ்சி: 25/142,143 வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும் பின்றா சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும் - வஞ்சி: 25/143,144 பின்றா சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும் குன்றா சிறப்பின் கொற்றவள்ளையும் - வஞ்சி: 25/144,145 வஞ்சி நுண் இடை மணிமேகலை-தனை - மணி:5/81 வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி - மணி:19/120 பூம்கொடி வஞ்சி மா நகர் புகுவை - மணி:21/91 பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் - மணி:26/78 பொன் கொடி வஞ்சியில் பொருந்திய வண்ணமும் - மணி:0/86 பூத்த வஞ்சி பூவா வஞ்சியில் போர் தொழில் தானை குஞ்சியில் புனைய - மணி: 26/78,79 வஞ்சியின் இருந்து வஞ்சி சூடி - மணி:19/120 வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின் வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும் - மணி: 28/2,3 காய் குலை கமுகும் வாழையும் வஞ்சியும் பூ கொடி வல்லியும் கரும்பும் நடு-மின் - மணி: 1/46,47 வஞ்சியுள் புக்கு மா பத்தினி-தனக்கு - மணி:24/155 வருந்தாது ஏகி வஞ்சியுள் புக்கனர் - மணி:25/206 மறுபிறப்புஆட்டி வஞ்சியுள் கேட்பை என்று - மணி:25/212 வங்கத்து ஏகுதி வஞ்சியுள் செல்வன் என்று - மணி:25/238 வஞ்சி இடை நுடங்க மயில் கை வீசி நடந்ததே - சிந்தா:1 341/4 வஞ்சித்தேன் என வஞ்சி அம் கொம்பு அனாள் - சிந்தா:1 358/2 வஞ்சி வாட்டிய வாள் மின் நுசுப்பினார் - சிந்தா:8 1947/1 வஞ்சி நுண் இடை கவின் பெற வைகினன் மாதோ - சிந்தா:12 2384/4 வஞ்சி நுண் இடை வம்பு அணி வெம் முலை - சிந்தா:12 2576/2 இமைத்தன வஞ்சி என்ன இளையவள் சிலம்பில் குஞ்சி - சிந்தா:13 2839/3 வார் அணி வன முலை வஞ்சி கொம்பு அனார் - சிந்தா:13 2894/2 வஞ்சி மென்_கொடியின் முக மலர் கவினும் மருங்கினில் விசித்த பட்டு உடையும் - சீறா:275/1 வஞ்சி மெல்இடை வாட்டமும் நடுக்கமும் வாச - சீறா:453/1 வஞ்சி நுண்ணிடையார்-தம்மிடத்து உறையார் முகம்மது மனத்திடத்து உறைந்தார் - சீறா:1015/4 இடத்தினில் நின்ற வஞ்சி தருவினை எதிர்ந்து நோக்கி - சீறா:2282/2 பாசடை குழைத்த வஞ்சி தரு படி துளைத்து உள் ஓடி - சீறா:2283/1 வஞ்சி அனையார் மணி நடையும் விஞ்சியது - நள:34/2 சித்திரவாகனன் பயந்த சித்திராங்கதை என்னும் செம் சொல் வஞ்சி பத்திரமும் நறு மலரும் அவயவம் போல் விளங்குவன பலவும் கொய்து - வில்லி:7 26/2,3 நல் நாளில் நன்மை தரும் ஓரையில் நல்க வஞ்சி அன்னாளிடத்தில் அபிமன்னு அவதரித்தான் - வில்லி:7 86/3,4 வஞ்சி நேர் இடை அரக்கியர் நக முழு மதி சிவப்பு உற தீட்டும் - வில்லி:9 23/3 வஞ்சி அம் தொடையல் மன்னன் முன்பு வர வந்த மா முனியை மன்னன் நீ - வில்லி:10 57/2 கொற்ற வஞ்சி மிலைச்சி ஏகுக குருநிலத்திடை என்னவே - வில்லி:28 36/4 வஞ்சி மதுரை புகார் உடையான் வட மண்டலிகர் திறை வாரிய நேரியன் - வில்லி:45 67/1 வஞ்சி மானதன் விடும் படையினில் கொடிய கண் மட நலீர் இடு மணி கடை திறந்திடு-மினோ - கலிங்:32/2 வஞ்சி கொம்பர் துஞ்சு அரித்து உளரி - உஞ்ஞை:40/118 வஞ்சி மருங்குல் வாடுபு நுடங்க - இலாவாண:9/163 மயர்வனள் விளிந்த என் வஞ்சி மருங்குல் - மகத:1/157 வருக குடநாடன் வஞ்சி கோமான் என்று - முத்தொள்:9/1 பூம் புனல் வஞ்சி அகம் - முத்தொள்:15/4
வஞ்சி நுண்_இடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே - தேவா-சம்:2489/4 பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை - தேவா-சம்:2814/1 வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும் - தேவா-சுந்:434/1 வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர் மா தவர் வளரும் வளர் பொழில் - தேவா-சுந்:891/1 தென்னன் கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான் - தேவா-சம்:2772/3 வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகை அவள் அப்பன் வன் தொண்டன் - தேவா-சுந்:891/3 கொடும் கரிக்குன்று உரித்து அஞ்சுவித்தாய் வஞ்சி கொம்பினையே - திருவா:6 19/4 வளம் மா பொதும்பரின் வஞ்சித்து நின்ற ஒர் வஞ்சி மருங்குல் - திருக்கோ:22/3 வடி கண் இவை வஞ்சி அஞ்சும் இடை இது வாய் பவளம் - திருக்கோ:32/1 நாமே நடக்க ஒழிந்தனம் யாம் நெஞ்சம் வஞ்சி அன்ன - திருக்கோ:344/3 எழில் வாய் இள வஞ்சியும் விரும்பும் மற்று இறை குறை உண்டு - திருக்கோ:94/1 மெல்லியல் வஞ்சி விடமி கலை ஞானி - திருமந்:1082/1 வளர் இள வஞ்சியின் மாய்தலும் ஆமே - திருமந்:2880/4 நீள் இலை வஞ்சி காஞ்சி நிறை மலர் கோங்கம் எங்கும் - 1.திருமலை:2 28/4 பூகம் ஞாழல் குளிர் வாழை மதூகம் பொதுளும் வஞ்சி பல எங்கும் நெருங்கி - 1.திருமலை:5 93/2 வஞ்சி இடை சங்கிலியார் வழி அடிமை பெருமையோ - 6.வம்பறா:2 250/3 அ நாட்டு உள்ளார் அடைய நிரந்து அணைந்தார் வஞ்சி அகல் நகர்வாய் - 7.வார்கொண்ட:4 46/4 வளவனார் பெரும் சேனை வஞ்சி மலர் மிலைந்து ஏற - 8.பொய்:2 19/1 மதி தங்கிய மஞ்சு அணி இஞ்சி வஞ்சி மணி வாயிலை அணைந்தார் - 13.வெள்ளானை:1 22/4 மென் சினைய வஞ்சிகளும் விசி பறை தூங்கு இன மாவும் - 4.மும்மை:4 8/3 மன்றல் வார் குழல் வஞ்சியை தேடுவான் - 1.திருமலை:5 155/3 வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு - நாலாயி:1126/2 வஞ்சி அம் தண் பணை சூழ் வயல் ஆலி புகுவர்-கொலோ - நாலாயி:1210/4 வஞ்சி மருங்குல் இடை நோவ மணந்து நின்ற கனவகத்து என் - நாலாயி:1595/1 தாழம் இன்றி முந்நீரை அஞ்ஞான்று தகைந்ததே கண்டு வஞ்சி நுண் மருங்குல் - நாலாயி:1864/1 இன் இள வஞ்சிகொடி ஒன்று நின்றதுதான் - நாலாயி:2755/6 இன் இள வஞ்சிகொடி ஒன்று நின்றதுதான் - நாலாயி:2755/6 மின்னும் மா வல்லியும் வஞ்சியும் வென்ற நுண் இடை நுடங்கும் - நாலாயி:1809/1 மின்னையும் வஞ்சியையும் வென்று இலங்கும் இடையாள் நடந்து - நாலாயி:1214/3 கண்டு மொழி கொம்பு கொங்கை வஞ்சி இடை அம்பு நஞ்சு கண்கள் குழல் கொண்டல் என்று பலகாலும் - திருப்:39/1 சிந்தை மகிழும் மருகா குறவர் இள வஞ்சி மருவும் அழகா அமரர் சிறை - திருப்:68/13 பாடி பாளிதம் காருகம் பாவை இடை வஞ்சி போல - திருப்:80/2 கந்த சந்தனமும் பொலியும் துகில் வஞ்சி சேரும் - திருப்:85/6 மூடி நெறி ஏதும் செய்யா வஞ்சி அதி பார - திருப்:94/2 காதி முதிர் வானமே தங்கி வாழ் வஞ்சி ஆடல் விடை ஏறி பாகம் குலா மங்கை - திருப்:94/11 வஞ்சத்துடன் ஒரு நெஞ்சில் பல நினை வஞ்சி கொடி இடை மடவாரும் - திருப்:96/1 கொந்து அளைந்த குந்தளம் தழைந்து குங்குமம் தயங்கு கொங்கை வஞ்சி தஞ்சம் என்று மங்கு காலம் - திருப்:97/3 கலை இறுகுறு துவள் வஞ்சி கொடி போல - திருப்:140/4 சிறக்கும் அழகிய திரு மகள் வஞ்சி குறத்தி மகள் உமை மருமகள் கொங்கை - திருப்:140/15 கொங்கை குடம் இரு கரியோ கிரியோ வஞ்சி கொடி இடை துடியோ பிடியோ - திருப்:151/3 கலை நெகிழ வளர் வஞ்சி இடை துவள உடல் ஒன்றுபட உருகி இதயங்கள் ப்ரியமே கூர் - திருப்:295/3 பெரிய தண் செச்சை கச்சு அணி வெற்பும் சிறிய வஞ்சி கொத்து எய்த்த நுசுப்பும் - திருப்:317/9 குவடு குனித்து புரம் சுடும் சின வஞ்சி நீலி - திருப்:322/12 நாவல் அரசு மனை வஞ்சி தந்து அருள் பெருமாளே - திருப்:359/16 வட அனலை முனிந்து வீசிய தென்றலாலே வயல் அருணையில் வஞ்சி போத நலங்கலாமோ - திருப்:406/2 வஞ்சி கொம்பு ஒப்பு எனும் மயிலே என முறை ஏய - திருப்:424/6 இமகிரி வந்த பொன் பாவை பச்சை வஞ்சி அகில தலம் பெறும் பூவை சத்தி அம்பை - திருப்:426/9 மழை அளகம் தரித்த கொடி இடை வஞ்சி உற்ற மயல் தணியும் படிக்கு நினைவாயே - திருப்:440/3 கொந்து அண் அம் குழல் இன்ப மஞ்சள் அணிந்து சண்பக வஞ்சி இளம் கொடி - திருப்:455/3 இளையவர் நெஞ்ச தளையம் எனும் சிற்றிடை கொடு வஞ்சி கொடி போல்வார் - திருப்:551/1 அகில் அடி பறிய எறி திரை அருவி ஐவன வெற்பில் வஞ்சி கணவா என்று - திருப்:657/3 சேரவே மணந்த நம்பர் ஈசனார் இடம் சிறந்த சீதள அரவிந்த வஞ்சி பெருவாழ்வே - திருப்:735/7 குலைக்கு மேல் விழவே ஏர் ஏறு போகமும் வஞ்சி தோயும் - திருப்:746/14 குஞ்சர கலாபம் வஞ்சி அபிராம குங்கும படீர அதி ரேக - திருப்:754/5 வஞ்சி எனும் கொடி சேர்ந்த நூல் இடை மடவார் பொன் - திருப்:763/4 வஞ்சி தண் குறமகள் பத மலர் பணி மணவாளா - திருப்:770/12 சிற்ப சிற்பம் மயிர் ஒத்த சிற்றிடைய வஞ்சி மாதர் - திருப்:814/2 சுந்தரி மணம் செயும் சவுரிய கந்த குற வஞ்சி தங்கு அரு வன - திருப்:854/11 ஏனல் மங்கை சுசி ஞான ரம்பை என தாயி சந்த்ர முக பாவை வஞ்சி குற - திருப்:855/13 மருவும் பொன் குடம் எழுந்த மா முலை வளர் வஞ்சி கொடி நடந்தவாறு என - திருப்:856/3 புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணம் கொள் புரந்தரன் வஞ்சி மணவாளா - திருப்:973/6 கோலம் அழிந்து சால மெலிந்து கோமள வஞ்சி தளரா முன் - திருப்:974/3 தீதிலா வஞ்சி அம் சீத பாதம் படும் சேகரா தண்டை அம் கழல் பேணி - திருப்:1104/7 வந்த நஞ்சு உகந்து அமைந்த கந்தரன் புணர்ந்த வஞ்சி மந்தரம் பொதிந்த கொங்கை உமை ஈனும் - திருப்:1156/7 வேடர் செழும் புன வஞ்சி அஞ்சன வேலின் உளங்கள் கலங்கி இன்புற - திருப்:1180/15 சந்தம் புனைந்து சந்தம் சிறந்த தண் கொங்கை வஞ்சி மனையாளும் - திருப்:1238/1 எனது அன்பில் உறை சயில மகிழ் வஞ்சி குறமகளொடு எணு பஞ்சணையில் மருவு பெருமாளே - திருப்:1249/8 வென்றி விளங்கு குன்றவர் வஞ்சி விஞ்சிய கொங்கை புணர் மார்பா - திருப்:1254/5 மாது சர்வேஸ்வரி வஞ்சி காளி பிடாரி விபஞ்சி வாணி வராகி மடந்தை அபிராமி - திருப்:1264/5 வஞ்சி போல் மருங்குல் குரும்பை போல் கொங்கை வாங்கு வேய் வைத்த மென் பணை தோள் - பால:3 9/2 வஞ்சி போல் மருங்குலார்-மாட்டு யாவரே வணங்கலாதார் - பால:17 7/4 வஞ்சி போல் இடையாள் முன்னை வண்ணத்தள் ஆகி நின்றாள் - பால-மிகை:9 63/2 வஞ்சி போலி என்று அடி மிசை வீழ்ந்து உரை-வழங்கும் - அயோ:2 75/4 சம்பக நறும் பொழில்களில் தருண வஞ்சி கொம்பு அழுது ஒசிந்தன என சிலர் குழைந்தார் - அயோ:5 14/1,2 வஞ்சி நாண இடைக்கு மட நடைக்கு - அயோ:7 20/1 வஞ்சி வாழ் வதனம் என்னும் தாமரை மலர்ந்தது அன்றே - அயோ:8 23/4 வஞ்சி சென்று இறுத்தவன் வாகை மீ கொள - அயோ:11 106/3 வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் - ஆரண்:6 24/4 இல்லா நிலத்தின் இயையாத வெம் சொல் எழ வஞ்சி எவ்வம் உற யான் - ஆரண்:13 66/1 வம்பு இழை கொங்கை வஞ்சி வனத்திடை தமியள் வைக - ஆரண்:13 124/1 ஆலும் மீன் கணம் அஞ்சின அலம்வர வஞ்சி கூல மா மரத்து இரும் சிறை புலர்த்துவ குரண்டம் - கிட்:1 19/3,4 வஞ்சி போலியர் மருங்கு என நுடங்கின வல்லி - கிட்:10 44/4 வார் ஆழி கலச கொங்கை வஞ்சி போல் மருங்குலாள்-தன் - கிட்:13 37/1 ஆதியை அகன்று செல்வார் அரக்கனால் வஞ்சி புண்ட - கிட்:15 27/2 செம் தாள் வஞ்சி திறத்து இறந்தவன் - கிட்:16 44/2 வஞ்சி அம் மருங்குல் அம் மறு இல் கற்பினாள் - சுந்:4 106/1 ஆறு துயர் அம் சொல் இள_வஞ்சி அடியன் தோள் - சுந்:5 10/3 வழிக்கும் கண்ணீர் அழுவத்து வஞ்சி அழுங்க வந்து அடர்ந்த - யுத்1:1 4/1 அரண் உனக்கு ஆவென் வஞ்சி அஞ்சல் என்று அருளின் எய்தி - யுத்1:4 113/2 அருந்ததியும் வந்தனை செய் அம் சொல் இள வஞ்சி இருந்த நகரின் புறன் ஒர் குன்றிடை இறுத்தான் - யுத்1:9 13/3,4 வஞ்சி அஞ்சும் இடை மங்கையர் வானத்து - யுத்1:11 13/2 வஞ்சி நெஞ்சம் தீய்ந்தவள் ஆனாள் மீட்டும் - யுத்2-மிகை:17 1/3 வஞ்சிகள் பொலிந்தன மகளிர் மானவே - கிட்:10 118/4 வஞ்சியின் செவ்வியாளை வசித்து என்பால் வருவீர் அன்றேல் - சுந்-மிகை:3 22/2 துப்பு அழி செ வாய் வஞ்சியை வௌவ துணை கொண்டிட்டு - ஆரண்:11 6/3 வஞ்சியை மீட்டிலென் என்னும் மானமும் - ஆரண்:13 58/2 வஞ்சியை அரக்கனும் வல்லை கொண்டுபோய் - ஆரண்:13 59/1 வஞ்சியை எங்கும் காணாது உயிரினை மறந்தான் என்ன - யுத்3:26 49/1
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
This site is very useful to know tree names in Tamil. Thanks