Skip to content
வண்

வண் என்பதன் பொருள் வளம், செழிப்பு, 2. மிகுதி, 3. பெரியதாய் இருத்தல், 4. கைவண்மை, ஈகை, கொடை, 5. வாளிப்பு, உடல் திரட்சி, செழுமை,

1. சொல் பொருள் விளக்கம்

(பெ) 1. வளம், வளமை; வளப்பம், செழிப்பு, 2. மிகுதி, 3. பெரியதாய் இருத்தல், 4. கைவண்மை, ஈகை, கொடை, வள்ளல் தன்மை, 5. வாளிப்பு, உடல் திரட்சி, அழகு செழுமை,

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

Fertility; fecundity, abundance, largeness, bigness, bounty, liberality, munificence, rotundity,

bounty, liberality, quality, property, nature, beauty; truth, fruitfulness, fertility, abundance, strength

வண்
வண்

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் – திரு 31

வளமுடைய செவிகளில் இட்டு நிறைந்த பிண்டியினது ஒள்ளிய தளிர்

வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் – திரு 106

மிகுதியான புகழ் நிறைந்து பகைவருடலைப் பிளந்து மீட்டும் வேலை வாங்கிய நிமிர்ந்த தோள்கள்

வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் – சிறு 27

பெரிய குலையினையுடைய பனை வளர்த்த நுங்கின்கண் உள்ள

தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என் – நற் 350/4

தேர்களை வழங்கும் வண்மையுடையவனாகிய விரான் என்பானது இருப்பையூரை ஒத்த

வலவன் ஆய்ந்த வண் பரி
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே – அகம் 20/15,16

பாகன் ஆய்ந்து தெரிந்த நன்கு வளர்ந்த குதிரைகள் (பூட்டிய)
நிலா வெளிச்சம் போன்ற வெண்மணலில் சுற்றிச் சுற்றி வரும் ஒரு தேர் உள்ளது என்று

வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என - திரு 285

வரு முலை அன்ன வண் முகை உடைந்து - சிறு 72

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த - பெரும் 353

வான வண் கை வளம் கெழு செல்வர் - மது 442

ஒண் குழை புணரிய வண் தாழ் காதின் - மது 709

வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க - நெடு 22

வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம் - மலை 337

கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ் - நற் 91/8

பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல் - நற் 99/7

தேர் வண் மலையன் முந்தை பேர் இசை - நற் 100/9

வண் பரி தயங்க எழீஇ தண் பெயல் - நற் 121/9

வண் மகிழ் நாள்அவை பரிசில் பெற்ற - நற் 167/3

ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ் - நற் 190/2

வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ் - நற் 198/10

தண் புதல் அணி பெற மலர வண் பெயல் - நற் 248/3

பல் குடை கள்ளின் வண் மகிழ் பாரி - நற் 253/7

மாரி வண் மகிழ் ஓரி கொல்லி - நற் 265/7

தேர் வண் சோழர் குடந்தை_வாயில் - நற் 379/7

ஓவாது ஈயும் மாரி வண் கை - குறு 91/5

வண் தேர் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து - குறு 260/6

வடு கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும் - ஐங் 14/2

தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள் - ஐங் 55/2

வண் துறை நயவரும் வள மலர் பொய்கை - ஐங் 88/1

வண் சினை கோங்கின் தண் கமழ் படலை - ஐங் 370/1

நுண் புரி வண் கயிறு இயக்கி நின் - ஐங் 489/4

வண் பரி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே - ஐங் 489/5

வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து - பதி 31/22

ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து - பதி 42/13

வண் கை வேந்தே நின் கலி மகிழானே - பதி 43/36

வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல் - பதி 51/17

மலர்ந்த மார்பின் மா வண் பாரி - பதி 61/8

வண் தார் புரவி வழி நீங்க வாங்குவார் - பரி 19/32

வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப - பரி 23/50

மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள் - கலி 24/6

தேர் ஈயும் வண் கையவன் - கலி 42/21

வண் பிணி தளைவிடூஉம் வயல் அணி நல் ஊர - கலி 73/5

வண்ண வண் தோன்றியும் வயங்கு இணர் கொன்றையும் - கலி 102/3

வண் பரி நவின்ற வய_மான் செல்வ - கலி 125/5

மழை வளம் தரூஉம் மா வண் தித்தன் - அகம் 6/4

வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்து - அகம் 37/7

கண் என மலர்ந்த சுனையும் வண் பறை - அகம் 38/11

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை - அகம் 59/4

மழ புலம் வணக்கிய மா வண் புல்லி - அகம் 61/12

ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன் - அகம் 77/16

மா வண் கடலன் விளங்கில் அன்ன எம் - அகம் 81/13

செம் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர - அகம் 86/27

மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி - அகம் 113/4

மழை மருள் பல் தோல் மா வண் சோழர் - அகம் 123/10

வண் பெயற்கு அவிழ்ந்த பைம் கொடி முல்லை - அகம் 124/11

இசை நல் ஈகை களிறு வீசு வண் மகிழ் - அகம் 152/11

வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து - அகம் 178/9

வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது - அகம் 179/5

வண் தோட்டு தொடுத்த வண்டு படு கண்ணி - அகம் 191/3

அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் - அகம் 208/4

மழை சுரந்து அன்ன ஈகை வண் மகிழ் - அகம் 238/13

வண்டு படு நறவின் வண் மகிழ் பேகன் - அகம் 262/16

வருவது மாதோ வண் பரி உந்தி - அகம் 278/9

உரை சால் வண் புகழ் பாரி பறம்பின் - அகம் 303/10

தொலையா வேலின் வண் மகிழ் எந்தை - அகம் 308/8

நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற - அகம் 338/9

வலவன் வண் தேர் இயக்க நீயும் - அகம் 340/4

மாவும் வண் தளிர் ஈன்றன குயிலும் - அகம் 355/1

பொய்யா நல் இசை மா வண் புல்லி - அகம் 359/12

மா வண் கழுவுள் காமூர் ஆங்கண் - அகம் 365/12

வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய - அகம் 376/15

மா வண் தோன்றல் வந்தனை சென்மோ - அகம் 394/12

தண் கயம் பயந்த வண் கால் குவளை - அகம் 395/1

கணை கழிந்து அன்ன நோன் கால் வண் பரி - அகம் 400/14

கணை பொருது கவி வண் கையால் - புறம் 7/3

தேர் வண் கிள்ளி தம்பி வார் கோல் - புறம் 43/10

தேர் வண் பாரி தண் பறம்பு நாடே - புறம் 118/5

ஈதல் எளிதே மா வண் தோன்றல் - புறம் 121/4

வண் பரி நெடும் தேர் பூண்க நின் மாவே - புறம் 146/11

பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ் - புறம் 151/5

மாரி வண் கொடை காணிய நன்றும் - புறம் 153/5

தேர் வண் கிள்ளி போகிய - புறம் 220/6

மலை கெழு நாட மா வண் பாரி - புறம் 236/3

வண் பரி புரவி பண்பு பாராட்டி - புறம் 301/13

வளி தொழில் ஒழிக்கும் வண் பரி புரவி - புறம் 304/3

வெண் காழ் தாய வண் கால் பந்தர் - புறம் 324/10

வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டு - புறம் 338/9

வண் கை எயினன் வாகை அன்ன - புறம் 351/6

மா வண் தித்தன் வெண்ணெல் வேலி - புறம் 352/9

கரவு இல்லா கவி வண் கையான் - புறம் 377/8

வண் புள்ளி மாறன் பொறையன் புணர்த்து யாத்த - ஐந்50:51/2

வண் துடுப்பு ஆய் பாம்பு ஆய் விரல் ஆய் வளை முரி ஆய் - திணை150:119/3

புண் கயத்து உள்ளும் வயல் ஊர வண் கயம் - திணை150:142/2

வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா - குறள்:24 9/1

திரு வாயில் ஆய திறல் வண் கயத்தூர் - ஆசாரக்:101/5

வரம்பிடை பூ மேயும் வண் புனல் ஊர - பழ:107/3
வண்
வண்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *