சொல் பொருள்
1. (வி) தங்கியிரு, வாழ்,
2. (பெ) தங்குமிடம்
சொல் பொருள் விளக்கம்
தங்கியிரு, வாழ்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
abide, stay, dwell
dwelling place
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை – குறு 5/2 தன்னிடத்தில் தங்கும் கொக்குகள் உறங்கும்படியான இனிய நிழலையுடைய புன்னைமரம் அளிதோ தானே நாணே ஆங்கு அவர் வதி_வயின் நீங்கப்படினே – குறு 395/7,8 இரங்கத்தக்கது நாணம்! அங்கே அவர் வசிக்கும் இடத்திற்கு நீங்கிச் சென்றால்-(நாணம் அழிந்துபோகும்) வெறி கொண்ட புள்_இனம் வதி சேரும் பொழுதினான் – கலி 123/12 ஒழுங்குமுறையில் பறந்து செல்லும் பறவைக் கூட்டம் தம் இருப்பிடம் சேரும் மாலைப்பொழுதில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்