சொல் பொருள்
(பெ.அ) புதிதான, புதியவர், அயலவர், காலமல்லாத காலத்தில் பெய்யும் மழை, கால மாற்றத்தால் வேறு நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வரும் பறவை, மோரியர், வடுகர் போன்ற அயல்நாட்டவரைக் குறிக்கும் சொல், அண்மையில் இறந்தவரைக் கற்களால் மூடிய அமைப்பு
சொல் பொருள் விளக்கம்
புதிதான,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
newcomer, stranger, unseasonal rain, migration bird, a word denoting aliens, fresh
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வம்ப மாக்கள் வருதிறம் நோக்கி செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் – நற் 298/1,2 பாலை வழியில், புதிய மக்கள் வருகின்ற தன்மையைப் பார்த்து, செம்மையான அம்பினை அவர்மீது தொடுக்கும் சினந்த பார்வையினரான ஆடவர் வம்ப மாரி – காலமல்லாத காலத்தில் பெய்யும் மழை, unseasonal rain மடவ மன்ற தடவு நிலை கொன்றை கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதர கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த வம்ப மாரியை கார் என மதித்தே – குறு 66 அறியாமையுடையன, நிச்சயமாக! இந்த அகலமாய் நிற்கும் கொன்றை மரங்கள்! மலைகள் விளங்கும் பாலைநிலத்து அரிய வழியில் சென்றோர் கூறிய பருவம் இன்னும் வராதபோது, மிகச் செறிவாக கிளைகளில் சேர்ந்த கொடிபோல் கொத்தாகப் பூத்தன, காலமல்லாது திடீரென்று தோன்றிய மழையைக் கார்ப்பருவ மழை என்று கருதி. வம்பப் பறவை – கால மாற்றத்தால் வேறு நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து வரும் பறவை, migration bird விட்டு என விடுக்கும் நாள் வருக அது நீ நேர்ந்தனை ஆயின் தந்தனை சென்மோ குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை நின்ற புன்னை நிலம் தோய் படு சினை வம்ப நாரை சேக்கும் தண் கடல் சேர்ப்ப நீ உண்ட என் நலனே – குறு 236 எம்மை விட்டுவிட்டுப் பிரியும் நாள் வருக! அதனை நீ மிகவும் வேண்டிப் பெற்றிருந்தால், தந்துவிட்டுச் செல் – மலையைப் போல குவித்திருக்கும் அடைத்தகரைமீது நின்றிருக்கும் புன்னையின் நிலத்தைத்தோய்ந்த தாழ்ந்த கிளையில் புதிய நாரை தங்கும் குளிர்ந்த கடற்பகுதியையுடைய தலைவனே! நீ நுகர்ந்த எனது பெண்மைநலனை – மோரியர், வடுகர் போன்ற அயல்நாட்டவரைக் குறிக்கும் சொல், a word denoting aliens மா கெழு தானை வம்ப மோரியர் – அகம் 251/12 வம்ப வடுகர் பைம் தலை சவட்டி – அகம் 375/14 அண்மையில் இறந்தவரைக் கற்களால் மூடிய அமைப்பு வம்ப எனப்பட்டது , fresh அம்பு விட வீழ்ந்தோர் வம்ப பதுக்கை – புறம் 3/21 அம்பை விடுதலால் இறந்தவரது உடல் மூடிய புதிய கற்குவியலின் மேலே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்