சொல் பொருள்
(பெ) நெல், கரும்பு முதலியன விளையும் இடம்,
சொல் பொருள் விளக்கம்
நெல், கரும்பு முதலியன விளையும் இடம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
field where paddy, sugarcane are grown
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க – நெடு 21,22 அழகிய வெளியையுடைய அகன்ற வயலில் நிறைந்த நீரால் செழித்து வளர்ந்த வளப்பமான தாள்களையுடைய நெல்லிலிருந்து மேலெழுந்த கதிர் (முற்றி)வளைய அகல் வயல் நீடு கழை கரும்பின் கணை கால் வான் பூ – அகம் 217/3,4 அகன்ற வயலிலுள்ள நீண்ட தண்டினையுடைய கரும்பின் திரண்ட காம்புடைய பெரிய பூக்கள் கழனி, செறு, வயல், ஆகியவற்றுக்கிடையேயுள்ள வேறுபாட்டைக் காண கழனி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்