சொல் பொருள்
(பெ) சந்ததி, தலைமுறை,
(வி.அ) பின்னர்,
சொல் பொருள் விளக்கம்
சந்ததி, தலைமுறை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
progeny, descendant, generation
afterwards
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உவரா ஈகை துவரை ஆண்டு நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே – புறம் 201/10-12 வெறுப்பிலாத கொடையினையுடையராய்த் துவராபதி என்னும் படைவீட்டை ஆண்டு நாற்பத்தொன்பது தலைமுறை தொன்றுபட்டு வந்த வேளிருள்வைத்து வேளாயுள்ளாய் நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை – பரி 2/13-15 நெய்தல், குவளை, ஆம்பல், சங்கம் குற்றமற்ற தாமரை, வெள்ளம் ஆகிய பேரெண்களால் குறிக்கப்பட்ட காலங்களின் ஈட்டங்களையும் கடந்த பின்னர் புக்க_வழி எல்லாம் கூறு கூறுவேன் மேயாயே போல வினவி வழிமுறை காயாமை வேண்டுவல் யான் – கலி 82/5-7 நீ சென்ற இடங்களையெல்லாம் சொல்வாயாக”; “சொல்கிறேன், விரும்பிக்கேட்பது போல் கேட்டு அதன் பின்னே வெகுளாதிருக்க வேண்டுகிறேன் நான்”
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்