சொல் பொருள்
(வி) 1. பெரிதாகு, பர, 2. மலர், 3. அவிழ், நெகிழ், 4. பரப்பு, 5. நீளத்தைப் பெரிதாக்கு,
சொல் பொருள் விளக்கம்
பெரிதாகு, பர,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
expand, spread out, be vast, blossom, unfold, become loosened, spread out, cause to expand, extend
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விரி கதிர் வெள்ளி முளைத்த நள் இருள் விடியல் – பொரு 71,72 விரிகின்ற (ஒளிக்)கதிர்களையுடைய வெள்ளி எழுந்த செறிந்த இருளையுடைய விடியற்காலத்தே, விரி கடல் வேலி வியல்அகம் விளங்க – சிறு 114 பரந்த கடலாகிய வேலியை உடைய உலகம் (எல்லாம்)விளங்கும்படி பை விரி அல்குல் கொய் தழை தைஇ – குறி 102 பாம்பின் படத்தைப் போல பரந்த அல்குலுக்கு நறுக்கின தழையைக் கட்டி உடுத்தி விரி நூல் அந்தணர் விழவு தொடங்க – பரி 11/78 விரிந்த மெய்நூல்களைக் கற்றறிந்த அந்தணர் திருவிழாவைத் தொடங்க முள் அரை தாமரை முகிழ் விரி நாள்_போது – சிறு 183 முள்(இருக்கும்) தண்டினை(க்கொண்ட) தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின் கவரி முச்சி கார் விரி கூந்தல் – பதி 43/1 கவரிமானின் மயிர் சேர்த்த உச்சிக் கொண்டையினையும், மேகத்தைப் போன்ற விரிந்த கூந்தலையும் நன் பல, வம்பு விரி களத்தின் கவின் பெற பொலிந்த – குறி 197,198 நல்ல பலவாகிய,கச்சைகளைப் பரப்பிவிட்ட களம் போல அழகு மிக்குப் பொலிவுற்ற
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்