விளவு என்பது விளாமரம்.
1. சொல் பொருள்
(பெ) விளா, கடிபகை, பித்தம், விளவு, ஒரு மரம். பார்க்க: விளம்பழம்
2. சொல் பொருள் விளக்கம்
தரையோடு ஒட்டிப் படரக்கூடியது நில விளா என்றும், சிறிய மரமாக வளரும் இயல்புடையதை சித்தி விளா என்றும், இங்கு விளக்குவது பெரிய மர வகுப்பைச் சார்ந்த பெருவிளா மரம். விசாக நட்சத்திரத்தின் மரம் விளா. இம்மரத்தின் பழம் விளாம்பழம் எனப்படுகின்றது
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Feronia elephantum
- ஆங்கிலம்: Wood Apple, Elephant Apple, Monkey Fruit or Curd Fruit.
- ஒரியா: Kaintha
- கன்னடம்: Belada Hannu / Byalada Hannu
- தெலுங்கு: Vellaga Pandu
- வங்காளி: Koth Bel (কৎ বেল)
- இந்தி: Kaitha (कैथा) or Kath Bel.
- மராட்டி: KavaTH (कवठ).
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
களவும் புளித்தன விளவும் பழுநின – அகம் 394/1 களாவும் பழுத்துப் புளிப்புச்சுவையை எய்தின, விளாவும் முதிர்ந்து பழுத்தன உடும்பு அடைந்து அன்ன நெடும் பொரி விளவின் – நற் 24/2 உடும்பு அடைந்துகிடந்ததைப் போன்ற நெடிய செதில்களையுமுடைய விளாமரத்திலிருந்து பொரி அரை விளவின் புன் புற விளை புழல் – அகம் 219/14 விளா மரத்தின் பட்டை பொரிந்து காணப்படுவது. கனிகள் கோடையில் காணப்படுபவை. கனிகளில் அடிக்கடி உள் சதை சிதைந்து வெறும் ஓடு மட்டும் உள்ளீடற்றுக் காணப்பட்டு ஓட்டில் உள்ள ஒன்றிரண்டு துளைகள் வழியாகக் கோடைக் காற்று உள்ளும் வெளியும் சென்று குழல் போன்று இசை பாடும். விளாம்பழங்கமழுங் கமஞ்சூற்குழி சிப் பாசந்திறை தேய் கான் மத்த நெய் தெரியியக்கம் வெளில் முதன் முழங்கும் - நற்றிணை 12 பந்து கிடப்பது போன்று விளாம்பழம் தரையில் பரவி இருக்கும். அருகாது ஆகிப் பல பழுத்த கண்ணும் பொரிதாள் விளவினை வாவல் குறுகா - நாலடியாரின் 261 விளா மரத்தை வௌவால் குறுகாததற்குக் காரணம், அதன் முள்ளும் பழத்தின் தடித்த ஓடும்தான். வெள்ளிற குறுமுறி கிள்ளுப தெரியாக் - திருமுருகாற்றுப்படை 37 விளங்காய் திரட்டினார் இல்லை - நாலடியார் 107 புளிவிளங்கா - நாலடியார் 328 வேழம் உண்ட விளம்பழம் பொரி அரை விளவின் – of the wood apple trees with rough and cracked trunks – வைதேகி ஹெர்பர்ட் மொழிபெயர்ப்பு
பார்வை யாத்த பறை தாள் விளவின்/நீழல் முன்றில் நில உரல் பெய்து - பெரும் 95,96 உடும்பு அடைந்து அன்ன நெடும் பொரி விளவின்/ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு - நற் 24/2,3 பொரி அரை விளவின் புன் புற விளை புழல் - அகம் 219/14 மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில் - புறம் 181/1 களவும் புளித்தன விளவும் பழுநின - அகம் 394/1 பொரி தாள் விளவினை வாவல் குறுகா - நாலடி:27 1/2 விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசி - நற் 12/1 விளங்காய் திரட்டினார் இல்லை களம் கனியை - நாலடி:11 3/3 பொன்னும் புளி விளங்காய் ஆம் - நாலடி:33 8/4
விளவு ஆர் கனி பட நூறிய கடல்வண்ணனும் வேத - தேவா-சம்:105/1 விளவு தேனொடு சாதியின் பலங்களும் வேய் மணி நிரந்து உந்தி - தேவா-சம்:2660/1 கன்று ஒரு கையில் ஏந்தி நல் விளவின் கனி பட நூறியும் - தேவா-சம்:3197/1 கன்றால் விளவு எறிந்தான் பிரமன் காண்பு_அரிய - திருவா:15 2/2 கரி உண் விளவின் கனி போல் உயிரும் - திருமந்:2593/1 விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி கண்ணினின் உள்ளே கலந்து அங்கு இருந்தது - திருமந்:315/1,2 வன் திரள் விளவின் கோட்டு வார் வலை மருங்கு தூங்க - 3.இலை:3 3/2 வெந்த ஊன் அயில்வார் வேரி விளங்கனி கவளம் கொள்வார் - 3.இலை:3 35/2 விரும்பா கன்று ஒன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே - நாலாயி:228/2 உலங்கு உண்ட விளங்கனி போல் உள் மெலிய புகுந்து என்னை - நாலாயி:582/3 காய்த்த நீள் விளங்கனி உதிர்த்து எதிர்ந்த பூம் குருந்தம் - நாலாயி:788/1 துஞ்சினார் செல்லும் தொல் நெறி கேட்டே துளங்கினேன் விளங்கனி முனிந்தாய் - நாலாயி:1004/2 கொம்பு உருவ விளங்கனி மேல் இளம் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம் - நாலாயி:1579/2 கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆநிரைக்கு அழிவு என்று மா மழை - நாலாயி:1844/1 விடம் கலந்து அமர்ந்த அரவணை துயின்று விளங்கனிக்கு இளம் கன்று விசிறி - நாலாயி:1823/1 விளங்கனிக்கு கன்று எறிந்தான் வெற்பு - நாலாயி:2349/4 விளங்கனியை இளம் கன்று கொண்டு உதிர எறிந்து வேல் நெடும் கண் ஆய்ச்சியர்கள் வைத்த தயிர் வெண்ணெய் - நாலாயி:1234/1 சென்று பிடித்து சிறு கைகளாலே விளங்காய் எறிந்தாய் போலும் - நாலாயி:250/3 இழை ஆடு கொங்கை தலை நஞ்சம் உண்டிட்டு இளம் கன்று கொண்டு விளங்காய் எறிந்து - நாலாயி:1222/1 வெம் சின களிற்றை விளங்காய் விழ கன்று வீசிய ஈசனை பேய்மகள் - நாலாயி:1645/1 கன்றால் விளங்காய் எறிந்தான் ஊர் கண்ணபுரம் நாம் தொழுதுமே - நாலாயி:1706/4 கானக வல் விளவின் காய் உதிர கருதி கன்று-அது கொண்டு எறியும் கரு நிற என் கன்றே - நாலாயி:67/2 தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை திருமாலே - நாலாயி:2200/3 விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன் - நாலாயி:2281/3 கன்றினால் விளவு எறிந்ததும் காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா - நாலாயி:716/2 கன்று-அதனால் விளவு எறிந்து கனி உதிர்த்த காளை காமரு சீர் முகில்_வண்ணன் காலிகள் முன் காப்பான் - நாலாயி:1245/1 கனிந்த விளவுக்கு கன்று எறிந்த கண்ணபிரானுக்கு என் பெண்மை தோற்றேன் - நாலாயி:3587/2 தாவி அன்று உலகம் எல்லாம் தலை விளா கொண்ட எந்தாய் - நாலாயி:906/1 விளவின் இள இலை தளவு குவளை கமழ் பவள நிற வெட்சி திரு தாள் வணங்குவேனோ - திருப்:1222/4 விளவு சிறு பூளை நகுதலையொடு ஆறு விட அரவு சூடு அதி பார - திருப்:245/6 வேழம் உண்ட விளா கனி அது போல மேனி கொண்டு வியாபக மயல் ஊறி - திருப்:653/1 நேரோடம் விளா முதலார் சடை எம்பெருமானே - திருப்:775/8 வேயும் கணியும் விளாவும் படு புனம் மேவும் சிறுமி தன் மணவாளா - திருப்:1036/5 மந்தரை கமுகு புன்னை நாரத்தை மகிழ் விளா மருது எலுமிச்சை - சீறா:1002/3 ஓடினான் ஆவின் பேர் இளம் கன்றை உயிருடன் ஒரு தனி விளவில் சாடினான் அரவின் முதுகையும் புள்ளின் தாலுவோடு அலகையும் பிளந்தான் - வில்லி:10 119/3,4 கன்றால் விளவின் கனி உகுத்தும் கழையால் நிரையின் கணம் அழைத்தும் - வில்லி:27 218/1 கன்றால் விளவின் கனி உதிர்த்தோhttps://solalvallan.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/ன் கடவும் திண் தேரவன் ஆக - வில்லி:39 43/1 விளவினை எறிந்து என வீர வேலினால் - வில்லி:45 129/2 கன்றால் முன் விளவு எறிந்த கண்ணன் என்ன கால் முடியோடு உற வளைத்து வான் மேல் வீசி - வில்லி:5 62/2 கன்றினால் விளவு எறிந்த கள்வன் இவன் நின்று தேர் நனி கடாவினும் - வில்லி:27 134/3 வேங்கையும் ஆவும் விளவும் வேயும் - இலாவாண:12/13 வெம் சின வேழம் உண்ட விளங்கனி போன்று நீங்கி - சிந்தா:4 1122/2 ஐயா விளாம்பழமே என்கின்றீர் ஆங்கு அதற்கு பருவம் அன்று என் - சிந்தா:6 1553/2
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்