சொல் பொருள்
ஒரு சங்ககாலப் புலவர்,
சொல் பொருள் விளக்கம்
வெள்ளிவீதியார் சங்ககாலப் பெண்புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் 13 பாடல்கள் இவரால் பாடப்பட்டவை.
வெள்ளிவீதியார் பாடல்கள் : நற்றிணை 70, 335, 348, குறுந்தொகை 27, 44, 58, 130, 146, 149, 169, 386 அகநானூறு 45, 362 வெள்ளிவீதியார் கவிதைகளில் ஒரே ஒரு உணர்ச்சிதான் ஆழமாக வெளிப்படுகிறது. காதலன் அல்லது தலைவன் கிடையாமை அடிப்படையில் பிறந்த ஆழ்ந்த சோகம்.
ஔவையார் வெள்ளிவீதியைப் பற்றி அகம் 147-இல் குறிப்பிடுகிறார். அப்பாடலில், தலைவன் பொருள்செயப் பிரியப்போவதைத் தோழி தலைவியிடம் சொல்கிறாள். தலைவி தானும் தலைவனுடன் செல்ல விரும்புவதாகக் குறிப்பிடுகிறாள். அப்போது வெள்ளிவீதி போலச் செல்ல விரும்புகிறேன் என்கிறாள்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a poetess of sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஔவையார் குறிப்பிலிருந்து வெள்ளிவீதியார் பொருளீட்டச் சென்ற தன் கணவனுடன் தானும் சென்றார் எனத் தெரியவருகிறது. பொறி கிளர் உழுவை போழ் வாய் ஏற்றை அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் நெறி படு கவலை நிரம்பா நீள் இடை வெள்ளிவீதியை போல நன்றும் செலவு அயர்ந்திசினால் – அகம் 147/6-10 புள்ளிகள் விளங்கும் பிளந்த வாயையுடைய ஆண்புலி அறல்பட்ட கொம்பினையுடைய ஆண் மானினது குரலினை உற்றுக்கேட்கும் கவர்த்த நெறிகள்பொருந்திய செல்லத்தொலையாத நீண்ட காட்டிலே தன் கணவனைத் தேடிச் சென்ற வெள்ளிவீதி என்பாளைப் போன்று செல்லுதலை மிகவும் விரும்பியுள்ளாய்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்