சொல் பொருள்
தங்குதல், வாழ்தல், நாள், விடியற்காலம், வைகறை, பொழுது, காலம், வேளை, நாள்தோறும்
சொல் பொருள் விளக்கம்
தங்குதல், வாழ்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
staying, dwelling, day, daybreak, dawn, time, period, moment, instant, everyday
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சேவல் அம் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே – குறு 0/5,6 சேவல் வரைந்த அழகிய கொடியையும் உடையோன் காத்து அருளுவதால் இனிமையான வாழ்வை எய்தி நிற்கின்றன உலகத்து உயிர்கள் மெல் இயல் அரிவை நின் நல் அகம் புலம்ப நின் துறந்து அமைகுவென் ஆயின் என் துறந்து இரவலர் வாரா வைகல் பல ஆகுக யான் செலவு_உறு தகவே – குறு 137 மென்மையான இயல்புடைய நங்கையே! உன் நல்ல நெஞ்சு வருந்தும்படி உன்னைத் துறந்து அமைந்திருப்பேனாயின், என்னை நீங்கி இரப்போர் வராத நாட்கள் பலவாகுக, எனது பயணத்தின் தகுதியில் மத்து கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ – பதி 71/16 தயிர் கடையும் மத்து கயிற்றினில் சுழலாத விடியற்காலத்தே, உன்னை நினைத்து வந்து, சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட மதுரை பெரு முற்றம் போல – கலி 96/22,23 சேவகனே! ஞாயிற்றின் கதிர்கள் விரிகின்ற விடியற்காலையில் கையால் வாரப்பெற்ற மதுரை நகரின் பெரிய முற்றத்தைப் போல, ஓர் இரா வைகலுள் தாமரை பொய்கையுள் நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ – கலி 5/14,15 ஒரே ஒரு இரவுபொழுதுக்குள், தாமரைப் பொய்கையின் நீரிலிருந்து பிடுங்கி எறியப்பட்ட மலரைப் போல, நீ பிரிந்து சென்றால் இவள் வாழ்வாளோ? நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம் – கலி 29/13 பிரிவுத்துன்பம் மிகுந்திருக்கும் வேளையில் வாடைக் காற்று வந்து வருத்துகின்றதே வைகல் யாணர் நன் நாட்டு பொருநன் – புறம் 61/12 நாள்தோறும் புதுவருவாயை உடைய நல்ல நாட்டிற்கு வேந்தன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்