சொல் பொருள்
கிட, காலம்கழி, தங்கு, இரு, நிலைகொண்டிரு, விடி
சொல் பொருள் விளக்கம்
தங்கு, இரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be lying, pass the time, stay, be, abide, abide
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும் – புறம் 229/21 காற்றுப்போலும் இயலையுடைய மனஞ்செருக்கிய குதிரைகள் கதியின்றிக் கிடக்கவும் களம் மலி குப்பை காப்பு இல வைகவும் – புறம் 230/3 களத்தின்கண் நிறைந்த நெற்பொலி காவலின்றியே கிடப்பவும் அகன் தலை வையத்து புரவலர் காணாது மரம் தலை சேர்ந்து பட்டினி வைகி – புறம் 371/1,2 அகன்ற இடத்தையுடைய நிலவுலகத்தின்கண் எம்மைப் பாதுகாக்கும் வேந்தரைக் காணப்பெறாமையால் மன்றத்தின்கண் நிற்கும் மரத்தின் அடியிலே இருந்து பட்டினியால் கிடந்து கள் மாறு நீட்ட நணிநணி இருந்த குறும் பல் குறும்பின் ததும்ப வைகி புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர் – புறம் 177/6-8 கள்ளை ஒருவர்க்கொருவர் மாறுமாறாக நீட்டிட, ஒன்றற்கொன்று அணித்தாயிருந்த குறிய பல அரணின்கண்ணே இருந்து அக்கள்ளை நிரம்ப உண்டு காலங்கழித்து பின்னைச் செருக்கினால் விடாய் மிக்குப் புளிச்சுவையை விரும்பிய சிவந்த கண்ணையுடைய ஆடவர் நிழல் காண்-தோறும் நெடிய வைகி மணல் காண்-தோறும் வண்டல் தைஇ – நற் 9/7,8 நிழல் கண்டவிடமெல்லாம் நெடுநேரம் தங்கி, மணல் கண்டவிடமெல்லாம் சிறுவீடுகட்டி மகிழ்ந்து விளையாடி பாம்பு எறி கோலின் தமியை வைகி தேம்புதி-கொல்லோ நெஞ்சே – அகம் 322/5,6 கோலால் எறியப்பட்ட பாம்பினைப் போல வேறு துணையின்றி இருந்து வாடுகிறாயோ! நெஞ்சே! பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து – மலை 99 மழையோடு (எப்போதும்)நிலைகொண்ட அகன்ற இடமாகிய பெரிய கொல்லை நிலத்தில் கான யானை வெண் கோடு சுட்டி மன்றோடு புதல்வன் புன் தலை நீவும் அரு முனை பாக்கத்து அல்கி வைகு உற – அகம் 245/11-13 வீட்டிலிருக்கும்) காட்டுயானையின் வெள்ளிய கொம்பை எடுத்து வருதல் குறித்து மன்றின்கண் ஓடிவிளையாடும் புதல்வனுடைய புல்லிய தலையைத் தடவி ஏவும் அரிய போர்முனைகளையுடைய பாக்கத்திடத்தே தங்கி, இருள் கழியும் விடியல் தோன்ற – நாட்டார் உரை வைகு உற என்பதற்கு வைகுதல் உற என்று பொருள்கொள்வார் ஔவை.சு.து.- புறம் 233- உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்