சொல் பொருள்
(பெ) 1. மிகுதி, 2. மேன்மை, உயர்வு, 3. மேல், மேல்பரப்பு, 4. மிகுந்த உயரம்,
சொல் பொருள் விளக்கம்
மிகுதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
abundance, greatness, eminence, upper side, surface, great height,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இகல் மீ கடவும் இரு பெரு வேந்தர் – குறி 27 பகைமையை மிகுதியாகச் செலுத்தும் இரு பெரிய அரசர்களின் வென்றி ஆடிய தொடி தோள் மீ கை எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து பொன் அம் கண்ணி பொலம் தேர் நன்னன் – பதி 40/12-14 வெற்றிக் குரவை ஆடிய தொடி விளங்கும் தோள்களையும், மேம்பட்ட கையினையும், பகைவர் ஏழுபேரின் கிரீடப்பொன்னால் செய்த பதக்கம் அணிந்த வெற்றித்திருமகள் தங்கியிருக்கும் மார்பினையும் உடைய, பொன்னால் செய்த அழகிய தலைமாலை அணிந்த, பொன்னாலான தேரினைக் கொண்ட நன்னனின் மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின் பண் அமை தேரும் மாவும் மாக்களும் – பதி 77/5,6 பகைவரின் பிணத்தின் மீது உருண்டோடியும் தேய்ந்துபோகாத சக்கரங்களையுடைய சிறப்பாகச் செய்யப்பட்ட தேரினையும், குதிரைகளையும், காலாட்படையினரையும் மீ பால் வெண் துகில் போர்க்குநர் – பரி 10/79 உடலின் மேல் வெண்துகிலைப் போர்த்திருந்தனர் சிலர் காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை – கலி 4/9 “முத்துக்களும், மணிகளும் பரவலாகப் பதிக்கப்பட்ட மாலை மேலே கிடந்து அசையும் என் இளம் முலைகளைப் அரி மலர் மீ போர்வை – பரி 11/26 அழகிய மலர்களான மேற்போர்வையினையும் மீ நீர் நிவந்த விறல்_இழை கேள்வனை வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என – பரி 21/40,41 நீர் மேல் எழுந்த மிகச் சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்ணொருத்தி, கரையில் நிற்கும் தன் கணவனை ஒரு மூங்கிற்கழியைப் புணையாக நீரில் மூழ்கும் தன் கையில் எட்டுமாறு கொடுக்க என்று வேண்ட, மீ நீரான் கண் அன்ன மலர் பூக்குந்து – புறம் 396/2 நீரின் மேற்பரப்பில் குவளையும் தாமரையுமாகிய மகளிர் கண்போலும் பூக்கள் மலர்ந்திருக்கும் ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை வாய்வாய் மீ போய் உம்பர் இமைபு இறப்ப – பரி 17/30,31 முருகன் ஆவியாகக் கொள்கின்ற, அகிலிட்டு எழுப்பிய மணங்கமழும் புகை இடங்கள்தோறும் மிகவும் மேலுயர்ந்து போவதால், கண்ணிமைக்காத வானவர்கள் கண்ணிமைத்து அகல, கூம்பொடு மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது புகாஅர்புகுந்த பெரும் கலம் – புறம் 30/11-13 கூம்புடனே உயரத்தில் பூரிக்கப்பட்ட பாயை மாற்றாமல், அதன் மேல் பாரத்தையும் பறியாமல் ஆற்றுமுகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்