சொல் பொருள்
ஏசு, பழிகூறு, கொண்டிரு, உடைத்தாயிரு, மதித்துப்போற்று, உயிருடன் வை, கூர்மை, வைக்கோல்
சொல் பொருள் விளக்கம்
ஏசு, பழிகூறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
scold, abuse, sharpness, straw or hay of paddy or other grains, possess, have, keep, pay due regard to, keep alive
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அனையன் என்னாது அத்தக்கோனை நினையா கூற்றம் இன் உயிர் உய்த்தன்று பைதல் ஒக்கல் தழீஇ அதனை வைகம் வம்மோ வாய்மொழி புலவீர் – புறம் 221/7-10 அத்தன்மையையுடையோன் என்று கருதாது, அத் தகுதியை உடையோனை அவ்வாறு கருதாத கூற்ரம் இனிய உயிர் கொடுபோயிற்று அதனால், பையாப்புற்ற நம்முடைய சுற்றத்தை அணைத்துக்கொண்டு,அக் கூற்றத்தை வைவேமாக வாரீர் மெய்யுரையை உடைய புலவீர் நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா – பதி 25/5 நீ பகைத்து மேற்சென்றவரின் பெரிய மதில்கள் காப்புகளை வைத்திருக்கமாட்டா வையா மாலையர் வசையுநர் கறுத்த பகைவர் தேஎத்து ஆயினும் சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே – பதி 32/15-17 ஒரு பொருட்டாக மதிக்கத்தகாத இயல்பினரும், வசைமொழியே பேசுபவரும் ஆகிய உன்னால் வெகுளப்பட்ட பகைவரின் நாட்டில் இருப்பினும், சினங்கொள்ளாது இருக்கிறாய்! எனக்குண்டாகும் வியப்பு பெரியது! வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின் கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து – கலி 134/19,20 என்னை உயிருடன் வைத்து, என் நலனை அனுபவித்துச் சென்றவர் வராமற்போய்விட்டதை நினைத்துக்கொண்டிருத்தலால் செயலற்ற நெஞ்சத்தினளாய் நான் கலக்கத்தினுள் ஆழ்ந்து – வையினர் – உயிரோடு வைத்து – மா.இரா.உரை,விளக்கம் வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் – பெரும் 119 கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை கரு வை வேய்ந்த கவின் குடி சீறூர் – பெரும் 191 கரிய (வரகு)வைக்கோலால் வேய்ந்த அழகிய குடியிருப்பினையுடைய சிறிய ஊர்களில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்