சொல் பொருள்
(பெ) எதிர் என்பதன் இரட்டைக்கிளவி, மறுதலை,
சொல் பொருள் விளக்கம்
எதிர் என்பதன் இரட்டைக்கிளவி, மறுதலை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
obverse
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட கதியிற்றே காரின் குரல் குரல் கேட்ட கோழி குன்று அதிர கூவ மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு மலை முழை – பரி 8/17-21 முதல்வனே! உன் ஊர்தியாகிய யானை பிளிறும் ஒலியின் முழக்கத்தைக் கேட்ட தன்மையது முகிலின் இடிக்குரல்; அந்தக் காரின் இடிக் குரலைக் கேட்ட கோழி குன்றே அதிரும்படி கூவும்; அதைக் கேட்ட மதம் நிறைந்த யானையும் எதிர்க்குரலிட்டு அதிர முழங்கும்; இந்த ஒலிகளுக்கு எதிரும் குதிருமாய் ஆனது திருப்பரங்குன்றத்து மலைக்குகைகளில் எழுகின்ற எதிரொலி.; – எதிர்குதிர் – மறுதலை – பொ.வே.சோ உரை விளக்கம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்