Skip to content

சொல் பொருள்

(வி) 1. மகிழ், இன்பமடை,  2. ஆசைப்படு,  3. ஏமாந்துபோ,  4. கலக்கமுறு

சொல் பொருள் விளக்கம்

மகிழ், இன்பமடை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

rejoice, desire, get disappointed, be perplexed

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நின் பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க – பரி 7/85

உன்னால் கிடைக்கும் இன்பமான பயனைப் பாடி, துன்பம் நீங்கப்பெற்று மகிழ்வோமாக

அருந்த ஏமாந்த நெஞ்சம் – புறம் 101/9

உண்ண ஆசைப்பட்ட நெஞ்சே!

பெரும் தேன் கண்படு வரையில் முது மால்பு
அறியாது ஏறிய மடவோன் போல
ஏமாந்தன்று இ உலகம் – குறு 273/5-7

பெரிய தேனிறால் தங்கியிருக்கும் மலைப்பக்கத்தில், பழைய கண்ணேணியின்மேல்
அறியாமல் ஏறிய அறிவிலியைப் போல
ஏமாந்தது இந்த உலகம்

நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து – மது 575

நெஞ்சு கலக்கமுறும்படி இனிய கூட்டத்தைக் கைவிட்டு,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *