சொல் பொருள்
கயிறு உருட்டல் – புனைந்துரைத்தல்
சொல் பொருள் விளக்கம்
பஞ்சு, நூல், நார் முதலிய மூலப் பொருள் கொண்டு – நொய்தாகவும் தும்பு துகளாகவும் இருக்கும். அவற்றால் – வலிய கயிறு உருட்டுதல் வழக்கு. பல நுண்ணிழைகள் கூடுதலால் வலிய கயிறு உண்டாக்கப்படுதல் போல் ஆங்கும் ஈங்கும் கண்டு கேட்ட சில சிறிய செய்திகளைத் திரட்டி மனம் போலச் சேர்க்க வேண்டுவன சேர்த்து ஒன்றாக்கிப் பலரும் அறிய உருட்டி விடுவதைக் கயிறு உருட்டல் என்பது வழக்கம். தாமரைத் தண்டின் நூலே பல்லாயிரம் சேருங்கால் பருங்கயிறாகி யானையையும் கட்டிவிடும் என்பர். கயிறு உருட்டுபவரால் வலிமையானவரும் ஒரு கால் வீழ்ச்சியுறல் காணக் கூடியதே. சரடு விடுதல், கதைவிடல் காண்க.
இது ஒரு வழக்குச் சொல்
பார்க்க எடுத்துவிடல், கயிறு திரித்தல், பொய் புளுகு, கயிறு உருட்டல், கதைவிடல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்